Kohinoor diamond: கோகினூர் வைரத்தை திரும்பப் பெற வேண்டும் - முக்கிய செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kohinoor Diamond: கோகினூர் வைரத்தை திரும்பப் பெற வேண்டும் - முக்கிய செய்திகள்

Kohinoor diamond: கோகினூர் வைரத்தை திரும்பப் பெற வேண்டும் - முக்கிய செய்திகள்

Karthikeyan S HT Tamil
Sep 13, 2022 06:09 PM IST

கோகினூர் வைரத்தை அரசு திரும்பப் பெற வேண்டும், பூசணிக்காய் ரூ.47,000க்கு ஏலம் போனது உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

<p>கோகினூர் வைரம் (கோப்புப்படம்)</p>
<p>கோகினூர் வைரம் (கோப்புப்படம்)</p>

மேற்கு வங்கத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தியபோது காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பான சுழல் நிலவுகிறது.

வேதாந்தா – ஃபாக்ஸ்கான் குழுமத்துடன் ரூ.1.54 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குஜராத் அரசு கையெழுத்திட்டுள்ளது.

இங்கிலாந்து அரச குடும்பத்திடம் உள்ள கோஹினூர் வைரம், பூரி ஜெகன்நாத் கோயிலுக்குச் சொந்தமானது என ஸ்ரீ ஜெகன்நாத் சேனா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இதை இந்தியாவுக்கு மீட்டு வர வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் இ பைக் ஷோரும் ஒன்றில் திங்கள் கிழமை இரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு பெண் உட்பட 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்.

கிண்டல் செய்த இளைஞரை அடித்ததால் ஆத்திரப்பட்ட இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்துள்ள சம்பவம் பெரும் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

23 பொதுத்துறை நிறுவனங்களை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரயிலில் செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்ய விரும்புவோர், ரயிலில் அழைத்துச் செல்லலாம் என உரிமையாளர்களுக்கு இந்தியன் ரயில்வே அனுமதியளித்துள்ளது.

குஜராத்தில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சிக்கு உறுதியளிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் 5 கிலோ எடை கொண்ட பூசணிக்காய் ரூ.47,000க்கு ஏலம் போன சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று வெளியிட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம், நரசிங்க்பூரில் உள்ள துவாராகா பீடத்தின் சங்கரச்சாரியர் மறைவுக்கு பின்னர் பீடத்தின் அடுத்த வாரிசு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மின்மயமாக்கப்படும் என்று ஒன்றிய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு சட்ட மேதை அம்பேத்கரின் பெயரை சூட்ட வேண்டும் என்று தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் 1,500 இளைஞர்கள் இணைந்துள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் மறைவைத் தொடா்ந்து, தங்களது நாட்டை குடியரசு நாடாக உடனடியாக மாற்றும் திட்டமில்லை என்று நியூஸிலாந்து பிரதமா் ஜெசிந்தா ஆா்டன் தெரிவித்துள்ளாா்.

கேபிள் இணைப்பு இல்லாமல் செயற்கைக் கோள் மூலம் பிராட்பேண்ட் இணைப்பை வழங்கும் சேவையை இந்தியாவில் தொடங்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கென்யாவின் 5-வது அதிபராக வில்லியம் ரூட்டோ இன்று பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த 24 மாதங்களாகச் சரக்கு போக்குவரத்தில் அதிக மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு, இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற இரயில்வே சங்கத்தேர்தலில் 61-வது முறையாக 106 வயது முதியவர் ஒருவர் வெற்றி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் சைக்கிளில் சென்ற சிறுவனை நாய் ஒன்று கடித்து குதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் மருத்து படிப்புகளில் சேர வரும் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்டாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றின்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த மரணங்களை மாநில அரசுகளுடன் இணைந்து கணக்கிட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 4,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.