Sabarimala Prasadam: சபரிமலை அரவண பிரசாதம் விற்பனைக்கு திடீர் தடை !
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Sabarimala Prasadam: சபரிமலை அரவண பிரசாதம் விற்பனைக்கு திடீர் தடை !

Sabarimala Prasadam: சபரிமலை அரவண பிரசாதம் விற்பனைக்கு திடீர் தடை !

Karthikeyan S HT Tamil
Jan 12, 2023 08:04 AM IST

Sabarimala Aravana Prasadam: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்தில் அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது எழுந்துள்ள புகார் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலை அரவண பிரசாதம் - கோப்பு படம்
சபரிமலை அரவண பிரசாதம் - கோப்பு படம்

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 27-ல் மண்டல பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் 14 ஆம் தேதி நடைபெறும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மகரஜோதி அன்று பகல் 12 மணி வரை மட்டுமே நீலிமலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவண பிரசாதத்தில் தரமற்ற ஏலக்காய் பயன்படுத்தியது ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பிரசாதத்தைத் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் கேரள உயா் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சபரிமலை அரவண பிரசாதம் தயாரிக்கப் பயன்படும் பொருள்களில் ஒன்றான ஏலக்காயில் குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது ஆய்வக சோதனையில் உறுதியானது. இதையடுத்து, அந்தப் பிரசாதத்தைத் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் கேரள உயா் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அரவண பிரசாதம்
அரவண பிரசாதம்

ஐயப்பா ஸ்பைஸஸ் என்ற நிறுவனம் கேரள உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் ஆய்வக சோதனை மேற்கொள்ளப்பட்டது. கேரள உயா் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், பி.ஜி. அஜித்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன்பு இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதேவேளையில், ஏலக்காய்கள் பயன்படுத்தப்படாத அல்லது அரசு ஆய்வகச் சோதனைக்குப் பிறகு கொள்முதல் செய்யப்பட்டவற்றைப் பயன்படுத்தி பிரசாதத்தை திருவிதாங்கூா் தேவசம் போர்டு தயாரிக்கலாம்’ எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, இந்த மனு மீதான விசாரணை ஜன.13-ஆம் தேதிக்கு (நாளை) ஒத்திவைக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்தில் அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது எழுந்துள்ள புகார் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.