Kejriwal Arrest: மதுபான கொள்கை ஊழல் பணம் பஞ்சாப், கோவா தேர்தலில் பயன்பாடு! கெஜ்ரிவாலுக்கு 10 நாள் காவல் - அமலாக்க துறை
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kejriwal Arrest: மதுபான கொள்கை ஊழல் பணம் பஞ்சாப், கோவா தேர்தலில் பயன்பாடு! கெஜ்ரிவாலுக்கு 10 நாள் காவல் - அமலாக்க துறை

Kejriwal Arrest: மதுபான கொள்கை ஊழல் பணம் பஞ்சாப், கோவா தேர்தலில் பயன்பாடு! கெஜ்ரிவாலுக்கு 10 நாள் காவல் - அமலாக்க துறை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 22, 2024 05:11 PM IST

மதுபானக் கொள்கையின் முக்கிய சதிகாரர் கெஜ்ரிவால் இருக்கிறார் அமலாக்க துறை சார்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்ட்ட நிலையில், 10 நாள்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கோரியுள்ளது.

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றம் அழைத்து வரப்படும் காட்சி
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றம் அழைத்து வரப்படும் காட்சி

அப்போது, டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் மூலம் கிடைத்த வருமானத்தை கெஜ்ரிவால் பயன்படுத்தியுள்ளதாகவும், அந்த கொள்கையில் உருவாக்குவதில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு தெரிவித்தார்.

எனவே 10 நாள்கள் காவலில் எடுத்து கெஜ்ரிவாலிடம் விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரினார்.

முன்னதாக, லஞ்சம் வாங்குவதற்கு உதவும் வகையில் விதிமுறைகளை (கலால்) கெஜ்ரிவால் உருவாக்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சிக்கும், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் பிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கே கவிதாவுக்கும் இடையே இடைத்தரகராக விஜய் நாயர் என்பவர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கா துறை சார்பில் நீதிமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?

  • அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் அருகே தங்கியிருந்த விஜய் நாயர், மதுபான அதிபர்களுக்கு சலுகை கேட்டு பெறுவதற்காக, முதல்மைச்சருடன் நெருக்கமாகி அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
  • பஞ்சாப் தேர்தலுக்காக குற்றம் சாட்டப்பட்ட தென்னிந்திய குழுவைச் சேர்ந்த சிலரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ .100 கோடி கேட்டுள்ளார்
  • கவிதாவிடம் சந்திப்பு நிகழ்த்திய கெஜ்ரிவால், மதுபானா கொள்கையில் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியதாக தகவல்கள் வந்துள்ளன
  • வருமானமாக கிடைத்த ரூ.100 கோடி மட்டுமல்ல, லஞ்சம் கொடுத்தவர்களால் பெறப்பட்ட லாபமும் குற்றத்தின் காரணமாக கிடைத்த வருமானம்தான்
  • அனைத்து விற்பனையாளர்களும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பணம் செலுத்தியுள்ளனர்
  • தென்னிந்திய குழுவிடமிருந்து பெறப்பட்ட சுமார் ரூ. 45 கோடி வருமானம், 2021-22 ஆம் ஆண்டில் கோவா பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி கட்சியால் பயன்படுத்தப்பட்டது
  • குற்றம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட அனைத்து விஷயங்களையும் அமலாக்கதுறை உறுதிபடுத்தியுள்ளது
  • இந்த விவகாரத்தில் ஏராளமான பணம் கைமாறியுள்ளது. கெஜ்ரிவால் தனது கூட்டாளிகளின் பங்குக்கும் பொறுப்பேற்க வேண்டும்
  • கோவா எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு பணம் கிடைத்ததாகவும் தெரிவித்ததாக தகவல்கள் வந்துள்ளன

கைதுக்கு பின் கெஜ்ரிவால் சொன்ன விஷயம்

அமலாக்கதுறையினரால் மார்ச் 21ஆம் தேதி இரவில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இரவு முழுவதும் அமலாக்கதுறை காவலில் இருந்தார்.

இதைத்தொடர்ந்து தனது கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்ற கெஜ்ரிவால், கீழமை நீதிமன்றத்தை அணுகினார்.

இன்று மதியம் நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கெஜ்ரிவால் தனது கைது நடவடிக்கை குறித்து, " சிறையில் இருந்தாலும், வெளியே இருந்தாலும் எனது வாழ்க்கையை நாட்டு மக்களுக்காக அர்பணித்துக் கொள்வேன்" என்று தெரிவித்தார்.

இரு மாதங்களில் இரண்டு முதலமைச்சர்கள் கைது

கடந்த ஜனவரி மாதம் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். நில மோசடி, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டது. ஹேமந்த் சோரன் கைது செய்யப்படுவதற்கு முன்பு முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

இவரை தொடர்ந்து தற்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.  டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆஜராக அமலாக்கதுறை சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தது. தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவும் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இவர்களுக்கு அடுத்தபடியாக 10 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கதுறையினர் கைது செய்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.