Covid Cases: கர்நாடகாவில் புதிதாக 298 பேர் கொரோனாவில் பாதிப்பு - 4 பேர் பலி
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Covid Cases: கர்நாடகாவில் புதிதாக 298 பேர் கொரோனாவில் பாதிப்பு - 4 பேர் பலி

Covid Cases: கர்நாடகாவில் புதிதாக 298 பேர் கொரோனாவில் பாதிப்பு - 4 பேர் பலி

Marimuthu M HT Tamil
Jan 05, 2024 12:39 PM IST

கர்நாடகாவில் புதிதாக கொரோனாவில் பாதிக்கப்பட்ட 298 பேரில் 172 பேர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பெங்களூருவில் 704 பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் 19 பேரும் மைசூரு மாவட்டத்தில் 18 பேரும் தக்‌ஷிண கன்னடா மாவட்டத்தில் 11 பேரும் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் 19 பேரும் மைசூரு மாவட்டத்தில் 18 பேரும் தக்‌ஷிண கன்னடா மாவட்டத்தில் 11 பேரும் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். (PTI)

புதிய வகை கொரோனாவால் 298 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 172 பேர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் எனவும்; இதன்மூலம் பெங்களூருவில் 704 பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் 229 பேர் குணமடைந்ததால் கர்நாடகாவில் கொரோனா நோயாளிகளாக இருப்பவர்களின் எண்ணிக்கை 1,240 ஆக உள்ளது. கர்நாடகாவில் மொத்த கொரோனா எண்ணிக்கை 40.92 லட்சமாக உள்ளது.

கர்நாடகாவின் மாவட்டங்களில், ஹாசன் மாவட்டத்தில் 19 பேரும், மைசூரில் இருந்து 18 பேரும், தட்சிண கன்னடா மாவட்டத்தில் இருந்து 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சாம்ராஜ்நகரில் இருந்து 8 பேரும்; அதே நேரத்தில் பல்லாரி மற்றும் கொப்பாலாவில் தலா ஆறு பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. துமகூரு, விஜயநகரம், சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களில் தலா 5 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய பாதிப்புகள் இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை புதன்கிழமை 9-ல் இருந்து 4ஆக குறைந்துள்ளது.

நான்கு இறப்புகளில், பெங்களூரு மாவட்டத்தில் இருந்து இரண்டு பேரும், மைசூரு மற்றும் தார்வாடில் தலா ஒரு மரணமும் பதிவாகியுள்ளது.

கொரோனா சோதனை மற்றும் மருத்துவமனையில் அனுமதித்தல்

கர்நாடகாவில் 7,791 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதிக்கப்பட்டது. அவற்றில் 6,900 ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் மற்றும் 891 விரைவான ஆன்டிஜென் சோதனைகள் (ஆர்.ஏ.டி). மூலம் கர்நாடகாவின் இறப்பு விகிதம் 1.34 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் செயலில் உள்ள 1,240 பேரில் 1,168 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது. சுமார் 60 நோயாளிகள் பொது வார்டுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மூன்றுபேர் ஆக்ஸிஜன் ஆதரவுடனும்;12 பேர் ஐ.சி.யூவிலும் உள்ளனர். நாட்டில் வியாழக்கிழமை 760 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.