Karnataka Election Results: முதல்வர் பசவராஜ் பொம்மை வெற்றி - பாஜகவுக்கு ஆறுதல்!
Basavaraj Bommai: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிக்கான் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இதில், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஷிக்கான் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான் பதான் களமிறக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 12:30 மணி நிலவரப்படி 134 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னணி வகிக்கிறது. பாஜக 62 தொகுதிகளிலும் மஜத 21 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
இதனிடையே, தற்போது வெளியாகியுள்ள முடிவுகள் படி, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிக்கான் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். ஷிக்கான் தொகுதியில் காங்கிரஸின் யாசிர் அகமது கான் பதான் என்பவரை எதிர்த்து 18,990 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். யாசிர் அகமதுகான் பதான் 44,394 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். மஜத சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 9006 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 908 வாக்குகள் பதிவாகி உள்ளது.
கடந்த 2018-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இதே, ஷிக்கான் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றிருந்தார். பொம்மை 83, 868 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளரான சையது அசிம்பீர் காத்ரி 74,603 வாக்குகளும் பெற்றனர். இந்நிலையில் இதே தொகுதியில் பசவராஜ் பொம்மை மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்