Diwali in united states: வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய ஜோ பைடன்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Diwali In United States: வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய ஜோ பைடன்!

Diwali in united states: வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய ஜோ பைடன்!

Karthikeyan S HT Tamil
Oct 25, 2022 11:56 AM IST

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.

தீபாவளி கொண்டாட்டத்தை அதிபர் ஜோ பைடன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
தீபாவளி கொண்டாட்டத்தை அதிபர் ஜோ பைடன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, தாய்லாந்து, இலங்கை, மியான்மர், நேபாளம், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்தியர்களால உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

தீபாவளி கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் ஆகியோர் கலந்துகொண்டனர். தீபாவளி கொண்டாட்டத்தை அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் இணைந்து குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

பின்னர் உரையாற்றிய பைடன், உலகுக்கு ஒளியை கொண்டு வரும் ஆற்றலை நாம் ஒவ்வெருவரும் கொண்டுள்ளோம் என்பதை இந்த தீபாவளி நினைவுபடுத்துவதாக தெரிவித்தார். அமெரிக்க கலாசாரத்தின் மகிழ்ச்சிக்குரிய விழாவாக தீபாவளி கொண்டாட்டங்கள் திகழ்வதாக குறிப்பட்ட ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமான அளவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளதாகவும் அவர்குறிப்பிட்டார்.

வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை இதற்கு முன்பு கொண்டாடப்பட்டிருந்தாலும் முன்னாப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை பெரிதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்திய வம்சாவளியான அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

இதேபோல் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி இருந்தன. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கைர்பூர் மாவட்டத்தில் உள்ள இந்து கோயிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான இந்துக்கள் கலந்துகொண்டு தீபம் ஏற்றியும், பாடல் பாடியும் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.