Photo Of Neptune Planet: நெப்டியூன் கோளின் துல்லியமான புகைப்படம் வெளிய வெளியீடு!-james webb telescope has captured and sent a precise image of neptune planet - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Photo Of Neptune Planet: நெப்டியூன் கோளின் துல்லியமான புகைப்படம் வெளிய வெளியீடு!

Photo Of Neptune Planet: நெப்டியூன் கோளின் துல்லியமான புகைப்படம் வெளிய வெளியீடு!

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 22, 2022 11:15 PM IST

ஜேம்ஸ் வெப் எனும் தொலைநோக்கி நெப்டியூன் கோளை துல்லியமாகப் படம் பிடித்து அனுப்பி உள்ளது.

<p>நெப்டியூன் கோளின் புகைப்படம்</p>
<p>நெப்டியூன் கோளின் புகைப்படம்</p>

மேலும் இது 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் சூரியனைச் சுற்றும் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சில மாதங்களுக்கு முன் படம் பிடித்து அனுப்பிய புகைப்படங்கள் அனைத்து தரப்பினரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. அதேசமயம் மிகப்பெரிய கோளாறு வியாழன் கோளை கடந்த மாதம் துல்லியமாகப் படம் பிடித்து அனுப்பியது.

இந்நிலையில் தற்போது சூரியக் குடும்பத்தில் இருக்கும் எட்டாவது கோளாறு நெப்டியூன் கொலை துல்லியமாகப் படம் பிடித்து இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நமக்கு அனுப்பியுள்ளது. இதனை நாசா தற்போது அனைவரின் பார்வைக்கும் வெளியிட்டுள்ளது.

கடந்த 33 ஆண்டுகளுக்குப் பிறகு நெப்டியூன் கிரகத்தைத் துல்லியமாக எடுக்கப்பட்ட புகைப்படம் இதுதான். பார்க்கும்போதே அந்த புகைப்படம் அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. சூரியனிலிருந்து 30 மடங்கு தொலைவில் நெப்டியூன் கோள் உள்ளது. எனவே சூரியன் மிகவும் மங்கலாகவும் சிறியதாகவும் தெரியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Whats_app_banner

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.