'முன்பு என் தந்தையிடம் இருந்து மெயில்வர 2 நாட்கள் ஆகும்; இப்போது..’ - கூகுள் 25-ம் ஆண்டில் சுந்தர் பிச்சை நெகிழ்வு பதிவு
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  'முன்பு என் தந்தையிடம் இருந்து மெயில்வர 2 நாட்கள் ஆகும்; இப்போது..’ - கூகுள் 25-ம் ஆண்டில் சுந்தர் பிச்சை நெகிழ்வு பதிவு

'முன்பு என் தந்தையிடம் இருந்து மெயில்வர 2 நாட்கள் ஆகும்; இப்போது..’ - கூகுள் 25-ம் ஆண்டில் சுந்தர் பிச்சை நெகிழ்வு பதிவு

Marimuthu M HT Tamil
Sep 06, 2023 07:50 PM IST

வாழ்வும் தொழில்நுட்பமும் அதிவேகமாக வளர்ந்துள்ளது என சி.இ.ஓ சுந்தர் பிச்சை, கூகுளின் 25ஆண்டு குறித்த பதிவில் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை

அதில் அவர் கூறியுள்ளதாவது, 'இந்த மாதம், எங்கள் கூகுள் 25வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இந்த மைல்கல்லை எட்டுவது மிகப்பெரிய பாக்கியம். எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கூகுள் ஊழியர்கள்,எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றியைப் பகிரும் தருணம் இது. 

கடந்த 25 ஆண்டுகளில் தொழில்நுட்பம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறது, அதை மக்கள் எப்படி மாற்றிக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றி நிறைய எண்ணங்கள், யோசனைகள் வருகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் அமெரிக்காவில் படிக்கும் போது, ​​என் அப்பா, அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும்போது முதல்முறையாக மின்னஞ்சல் முகவரியைப் பெற்றார். அவருடன் தொடர்புகொள்வதற்கான மலிவான வழியைப் பெற்றதில் நானும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இதையடுத்து முதன்முறையாக ஒரு மின்னஞ்சலை அவருக்கு அனுப்பினேன்.

பின்னர் நான் காத்திருந்தேன்… காத்திருந்தேன். முன்பெல்லாம் என்னுடைய தந்தையின் மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் அனுப்பிவிட்டு, அவர் பதிலுக்காக 2 நாட்கள் காத்திருப்பேன். அதற்குப்பின், 'Dear Mr.Pichai, Email received. All is well'எனப் பதிலளிப்பார். இன்று என் மகன், ஒரு விசயத்தைப் பார்த்து உடனே புகைப்படம் எடுத்து தனது நண்பர்கள் உடன் பகிர்ந்து, சேட்டிங் செய்வதைப் பார்க்கும்போது, வாழ்க்கையும் தொழில்நுட்பமும் எவ்வளவு வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது என வியந்தேன்’ என தனது கடந்த கால நினைவுகளை அசைபோட்டுள்ளார், சுந்தர் பிச்சை. உண்மை தானே!

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.