EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊதிய உச்ச வரம்பு உயர்வா?: ரூ.21,000 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு என தகவல்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Epfo: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊதிய உச்ச வரம்பு உயர்வா?: ரூ.21,000 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு என தகவல்

EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊதிய உச்ச வரம்பு உயர்வா?: ரூ.21,000 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு என தகவல்

Marimuthu M HT Tamil
Sep 22, 2024 01:14 PM IST

EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊதிய உச்ச வரம்பு உயர்வா? என்பது குறித்தும், ரூ.21,000 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊதிய உச்ச வரம்பு உயர்வா?: ரூ.21,000 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு எனத் தகவல்
EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊதிய உச்ச வரம்பு உயர்வா?: ரூ.21,000 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு எனத் தகவல் (HT Photo)

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO - Employees Provident Fund Organisation) மற்றும் ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கு (EPS - Employee Pension Scheme) சந்தாதாரர்கள் செலுத்தும் பங்களிப்புகளின் வரம்பை உயர்த்த அரசு நினைக்கிறது என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சொன்னதாக, பைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தியறிக்கை விட்டுள்ளது.

ஊழியர்களின் பங்களிப்புக்கான தற்போதைய ஊதிய உச்சவரம்பு ரூ.15,000 (2014ஆம் ஆண்டில் ரூ.6,500 ஆக இருந்தது) என்னும் வைப்பு நிதி, இனிவரும் காலங்களில் உங்கள் வருங்கால வைப்புநிதியில் அதிகம் பிடிக்கப்படலாம். இதன்மூலம், வருங்கால வைப்பு நிதி அதிகமாக முதலீடு செய்யப்படலாம் என அறிக்கை தெரிவித்துள்ளது.

EPFO பங்களிப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன?

ஊழியர் ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவாக சம்பாதித்தால், ஊழியர் மற்றும் முதலாளி இருவரும் தலா 12% வருங்கால வைப்பு நிதியில் சம்பந்தப்பட்ட ஊழியரின் நலன்கருதி பங்களிப்பு செய்கிறார்கள்.

இருப்பினும், முதலாளியின் பங்களிப்பு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதி 8.33% பணியாளர் ஓய்வூதிய திட்டத்திற்கு (EPS) ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3.67% வருங்கால வைப்பு நிதிக்கு செல்கிறது.

எனவே, மாதச்சம்பளம் ரூ.15,000 என்றால், ஊழியரின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு ரூ .1,800ஆக இருக்கும். முதலாளியின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு ரூ.550.50 ஆகவும், இபிஎஸ் எனப்படும் ஓய்வூதிய திட்டப் பங்களிப்பு ரூ .1,249.5 ஆகவும் இருக்கும்.

புதிய EPFO பங்களிப்பு வரம்பு என்னவாக இருக்கலாம்?

ஊதிய EPFO உச்சவரம்பை ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என்று அடையாளம் தெரியாத ஆதாரங்களை மேற்கோள்காட்டி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அது நடந்தால், ரூ.21,000 சம்பளம்பெறும், ஊழியர் ரூ.2,520 வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பார். முதலாளி EPFO-க்கு ரூ.770.70 மற்றும் EPS-க்கு ரூ .1,749.30 பங்களிப்பார்.

திருத்தப்பட்ட ஊதிய உச்சவரம்பு EPFO வட்டி தொகையை எவ்வளவு அதிகரிக்க முடியும்?

ரூ.15,000 அடிப்படை ஊதியத்துடன் 35 ஆண்டுகளுக்கு நிதிக்கு பங்களிக்க 23 வயதில் EPFO திட்டத்தில் சேரும் ஒரு ஊழியர் மொத்தம் ரூ.71.55 லட்சம் வருங்கால நிதியைப் பெறுவார். மொத்த பங்களிப்பான ரூ .10.71 லட்சத்திலிருந்து கூட்டு வட்டித்தொகை மட்டும் ரூ.60.84 லட்சமாக இருக்கும்.

இந்த வரம்பை ரூ.21,000ஆக உயர்த்தினால், மொத்த வருங்கால நிதி ரூ .1 கோடியை எட்டும். இதில் ரூ.15 லட்சம் முதலீடு செய்யப்பட்ட தொகை ஆகும் மற்றும் வட்டி தொகையாக ரூ.85 லட்சம் கிடைக்கும். அதாவது சம்பளம் ரூ.21,000ஆக இருந்தால் ஊழியர் கூடுதலாக ரூ.28.45 லட்சம் சம்பாதிக்க முடியும்.

EPFO திரும்பப்பெறும் வரம்பு என்ன?

EPFO எனும் வருங்கால வைப்பு நிதியைத் திரும்பப் பெறும் வரம்பும் தற்போது ரூ.50,000 லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக சில குடும்பங்களுக்கு அவசரநிலை ஏற்பட்டால் திரும்பப் பெறும் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் மாண்ட்வியாவை மேற்கோள் காட்டி அறிக்கை கூறுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.