பாலஸ்தீன மக்களுடனான ஒருமைப்பாட்டிற்கான சர்வதேச தினம்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
பாலஸ்தீன மக்களுடனான ஒருமைப்பாட்டிற்கான சர்வதேச தினம்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை குறித்துப் பார்ப்போம்.
நவம்பர் 29ஆம் தேதியை பாலஸ்தீன மக்களுடன் ஒருமைப்பாட்டுக்கான சர்வதேச தினமாக கொண்டாட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நியமித்துள்ளது.
1977ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நவம்பர் 29ஆம் தேதியை பாலஸ்தீனிய மக்களுடன் ஒருமைப்பாட்டிற்கான சர்வதேச தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்க அழைப்பு விடுத்தது.
அந்த நாளில், 1947ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் பாலஸ்தீனத்தின் பிரிவினை குறித்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டனர். இதுகுறித்து ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளதாவது, “பாலஸ்தீன மக்களுடன் ஒருமைப்பாட்டுக்கான சர்வதேச தினத்தை அனுசரிப்பது குறித்த தீர்மானம், ஒருமைப்பாட்டு தினத்தை அனுசரிப்பதற்கு தொடர்ந்து பரந்த ஆதரவையும் விளம்பரத்தையும் வழங்க உறுப்பு நாடுகளை ஊக்குவிக்கிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.