உலக அளவில் விமான போக்குவரத்தின் பங்கு என்ன? சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தினம் பின்னனி, முக்கியத்துவம் மற்றும் பல
விமான போக்குவரத்தின் பங்கு பற்றி விழப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தினம் இருந்து வருகிறது. 2040ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் விமான போக்குவர்தது வலையமைப்பை 190-200 விமான நிலையங்களுக்கு விரிவுபடுத்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
உலகின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் விமான போக்குவரத்து மற்றும் சர்வதேச விமான போக்குவரத்தின் பங்கு பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தினம் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச விமானப் போக்குவரத்தின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை பேணுவதில் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் (ICAO) சிறப்புப் பங்களிப்பையும் இந்த நாள் அங்கீகரிக்கிறது. விமான துறையின் மதிப்பு மற்றும் உலகளாவிய சமூக பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில், சர்வதேச விமான போக்குவரத்து உலகை எவ்வாறு இணைக்கிறது என்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இந்த நாளில் ஏராளமான நிகழ்வுகள், செயல்பாடுகள், கருத்தரங்குகள் மற்றும் விமானப் போக்குவரத்து பற்றிய விரிவுரைகளுடன் கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் டிசம்பர் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச சிவில் விமான் போக்குவரத்து தினம் வரலாறு
கடந்த 1996, டிசம்பர் 7 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் சர்வதேச சிவில் விமான தினம் அறிவிக்கப்பட்டது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO), கடந்த 1944இல் இதே நாளில் சிவில் விமான போக்குவரத்து விஷயங்களில் உலகளாவிய ஒத்துழைப்பையும் சீரான தன்மையையும் மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டது.
அப்போது, சர்வதேச விமான போக்குவரத்து ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சேவைகள் போக்குவரத்து ஒப்பந்தம் ஆகிய இரண்டும் ஒரே ஆண்டில் கையெழுத்தானது. அதன் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ICAO 1994இல் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினத்தை நிறுவியது.
சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தினத்தின் முக்கியத்துவம்
இந்த நாளின் முக்கியத்துவம், சிவில் விமானப் போக்குவரத்தின் மதிப்பு மற்றும் உலகின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். பாதுகாப்பான மற்றும் பயனுள்ள விமான போக்குவரத்துக்கான உலகளாவிய தரநிலைகளை நிறுவுதல் மற்றும் பராமரிப்பு விஷயத்தில் உலகளாவிய விமான நிறுவனங்களின் பங்கை, குறிப்பாக சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) முன்னிலைப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. இந்த நாள், விமான போக்குவரத்து எவ்வாறு உலகை இணைக்கிறது.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் விமான போக்குவரத்து போன்ற பொதுவான பிரச்னைகளைத் தீர்க்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. வர்த்தகம், சுற்றுலா, உலகளாவிய இணைப்பு மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கான விமானப் பயணத்தின் நன்மைகள் இந்த நாளில் அங்கீகரிக்கப்படுகிறது.
சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தினம் 2024 கருபொருள்
"பாதுகாப்பான வானம். நிலையான எதிர்காலம் இணைந்து அடுத்த 80 ஆண்டுகளுக்கு" இந்த ஆண்டுக்கான கருபொருளாக உள்ளது. சிகாகோ மாநாட்டில் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து நாளுக்காக கையெழுத்திட்டதன் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
இந்தியாவில் சிவில் விமான போக்குவரத்து
இந்தியாவில் சிவில் விமான போக்குவரத்து 1911இல் அலகாபாத்தில் இருந்து அஞ்சல் கொண்டு செல்லும் முதல் வணிக விமானத்துடன் தொடங்கியது. இன்று, இந்தியாவில் 33 சர்வதேச விமான நிலையங்கள் உட்பட 157 செயல்பாட்டு விமான நிலையங்கள் உள்ளன.
2040ஆம் ஆண்டுக்குள் இந்த வலையமைப்பை 190-200 விமான நிலையங்களுக்கு விரிவுபடுத்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவின் விமான ஓட்டிகளில் 15% பெண்களாக இருக்கிறார்கள். இது விமானத் துறையில் பாலின சமத்துவத்தின் முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.
டாபிக்ஸ்