HTLS 2022 :6% அதிகமான பணவீக்கம் இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்து- சக்திகாந்த தாஸ்-inflation above 6 can be detrimental to india growth rbi governor at htls 2022 - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Htls 2022 :6% அதிகமான பணவீக்கம் இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்து- சக்திகாந்த தாஸ்

HTLS 2022 :6% அதிகமான பணவீக்கம் இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்து- சக்திகாந்த தாஸ்

Divya Sekar HT Tamil
Nov 12, 2022 05:07 PM IST

6 சதவீததிற்கும் அதிகமான பணவீக்கம் இந்தியாவின் இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்

அப்போது பேசிய அவர், ”பணவீக்கம் 4 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை இருக்கும் பட்சத்தில் நாணயக் கொள்கை மூலம் இந்திய பொருளாதாரத்திற்கு உதவ முடியும். ஆனால் 6 சதவீதத்திற்கு மேல் பணவீக்கம் இருந்தால் இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்து என மேற்கோள் காட்டி பேசினார்.

அக்டோபர் மாதத்திற்கான பணவீக்கம் அடுத்த வாரம் வெளியிடப்படும். அது 7 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் குழு ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டது. அதில், 4 சதவீத +/-2% பணவீக்க இலக்கை நிர்ணயிப்பதன் மூலம் கொள்கையை மாற்றுவதற்கான நெகிழ்வுத்தன்மையை நமக்கு அளிக்கும் என்பதைக் கண்டறிந்தது.

உக்ரைன் போரைத் தொடர்ந்து, இந்தியாவில் பணவீக்க விகிதம் 6.3 சதவீதம் முதல் 7.3 சதவீதம் வரை உள்ளது. பிப்ரவரியில், பணவீக்க விகிதம் 4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 100 டாலர்களுக்கு விற்றால் கூட நம் பணவீக்கம் அதிகபட்சமாக இருக்கும் என்று நாங்கள் கணித்தோம். ஆனால் உக்ரைன் போருக்குப் பிறகு, அத்தியாவசியப் பொருட்களின் திடீர் விலை உயர்வு நிச்சயமற்ற நிலைக்கு வழிவகுத்தது. இது உலகளவில் பணவீக்கத்தைத் அதிகரித்தது. நம் நாடும் பாதிக்கப்பட்டது. மேலும் பணவீக்கத்தை சமாளிப்பதில் அதிகாரிகள் வெற்றி பெற்றுள்ளனர்”எனத் தெரிவித்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.