Dubai Lottery: ஒரே நாளில் கோடீஸ்வரரான இந்தியர்..துபாய் லாட்டரியால் அடித்த ஜாக்பாட்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Dubai Lottery: ஒரே நாளில் கோடீஸ்வரரான இந்தியர்..துபாய் லாட்டரியால் அடித்த ஜாக்பாட்!

Dubai Lottery: ஒரே நாளில் கோடீஸ்வரரான இந்தியர்..துபாய் லாட்டரியால் அடித்த ஜாக்பாட்!

Karthikeyan S HT Tamil
Feb 11, 2024 04:05 PM IST

குழந்தைகளின் பிறந்த தேதியை கணக்கிட்டு லாட்டரி சீட்டு வாங்கிய இந்தியருக்கு துபாய் லாட்டரியில் ரூ.33 கோடி பரிசு கிடைத்திருக்கிறது.

கோப்புபடம்
கோப்புபடம்

கடந்த 3 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் குலுக்கலில் கலந்து கொண்டு வரும் இவர், இந்த முறை பிக் டிக்கெட் அபுதாபி என்ற பெயரிலான வாராந்திர லாட்டரி சீட்டை வாங்கி இருக்கிறார். அந்த லாட்டரி சீட்டில், அவர் தன்னுடைய குழந்தைகளின் பிறந்த நாட்களின் எண்களாக செலக்ட் செய்து வாங்கி இருந்தார். அது தான் தற்போது அவருக்கு அதிர்ஷ்டத்தை தேடி தந்துள்ளது. அவர் வாங்கிய லாட்டரி மூலம் 15 லட்சம் திர்ஹாம் பரிசு கிடைத்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 33 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைத்துள்ளது.

இதுபற்றி அவர் கூறுகையில், "நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அல் ஐனில் வசிக்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்குகிறேன். லாட்டரியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இந்த முறை நானும் என் மனைவியும் 7 மற்றும் 13 எண்கள் கொண்ட டிக்கெட்டுகளைத் தேர்ந்தெடுத்தோம். இது எங்கள் குழந்தைகளின் பிறந்த தேதிகள். சுமார் 3 ஆண்டுகளில் முதன்முறையாக லாட்டரியில் பரிசு கிடைத்திருக்கிறது. 2 மாதங்களுக்கு முன் 10 லட்சம் திர்ஹாம் பரிசு தொகையை, இதே எண்களை தேர்வு செய்தபோது, நூலிழையில் தவற விட்டேன். இந்த முறை எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது என கூறுகிறார்.

நான் 2 டிக்கெட்டுகளை வாங்கினேன். அதற்கு பரிசாக இலவச அடிப்படையில், 4 டிக்கெட்டுகள் எனக்கு கிடைத்தன. அந்த டிக்கெட்டுகளே இவருடைய வெற்றிக்கு உதவின என்றும் தெரிவித்துள்ளார். பரிசை வெல்வேன் என்ற நம்பிக்கை எப்போதும் எனக்கு இருந்தது. வெற்றியாளர்களின் பெயரை கூறியபோது, அதில் என் பெயரும் உள்ளது என அறிந்தேன். ஆனால், அது முதல் பரிசு என்று என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். அவர் தனிப்பட்ட முறையில் பரிசு தொகையை வென்றபோதும், அதனை 19 பேருக்கு பகிர்ந்து கொள்வது என முடிவு செய்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.