Ajay Banga: உலக வங்கியின் அடுத்த தலைவரான அமெரிக்கவாழ் இந்தியர்-யார் இந்த அஜய் பங்கா?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ajay Banga: உலக வங்கியின் அடுத்த தலைவரான அமெரிக்கவாழ் இந்தியர்-யார் இந்த அஜய் பங்கா?

Ajay Banga: உலக வங்கியின் அடுத்த தலைவரான அமெரிக்கவாழ் இந்தியர்-யார் இந்த அஜய் பங்கா?

Manigandan K T HT Tamil
May 04, 2023 09:10 AM IST

World Bank President: கடந்த 2016-ஆம் ஆண்டு அஜய் பங்காவிற்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது.

உலக வங்கியின் அடுத்த தலைவர் அஜய் பங்கா
உலக வங்கியின் அடுத்த தலைவர் அஜய் பங்கா (Bloomberg)

இதுதொடர்பாக உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், "உலக வங்கியின் இயக்குநராக அஜய் பங்காவை உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.

அவருடன் இணைந்து செயல்படுவதில் இயக்குநர் குழு மிகுந்த ஆர்வமாக உள்ளது. ஜூன் 2ம் தேதி முதல் 5 ஆண்டுகள் வரை அஜய் பங்கா உலக வங்கியின் தலைவராக செயல்படுவார்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த அஜய் பங்கா?

இந்தியாவில் பிறந்தவர். இங்கே தான் படித்தார். மாஸ்டர்கார்டு நிறுவனத்தில் தலைவராக பதவி வகித்தார். தற்போது அமெரிக்காவின் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தில் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். 

கடந்த 2016-ஆம் ஆண்டு அஜய் பங்காவிற்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது. 

முன்னதாக, அஜய் பங்கா உலக வங்கியின் தலைவராக நியமிக்கப்படுவார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் பிறந்தார் அஜய் பங்கா. இவருக்கு ரிது பங்கா என்ற மனைவியும், அதிதி பங்கா, ஜோஜோ பங்கா ஆகிய மகள்களும் உள்ளனர்.

பிப்ரவரி 2015 இல், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான அதிபரின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பணியாற்ற அஜய் பங்காவை நியமித்தார்.

இந்தியாவில் முதலீடு செய்யும் 300- க்கும் மேற்பட்ட பெரிய சர்வதேச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க-இந்திய பிசினஸ் கவுன்சிலின் (யுஎஸ்ஐபிசி) முன்னாள் தலைவராகவும் இருந்திருக்கிறார் அஜய் பங்கா.

சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த இவர், அகமதாபாத் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் படித்துள்ளார்.

இவரது தந்தை ஹர்பஜன் சிங் பங்கா, ராணுவ வீரராக பணிபுரிந்தவர் ஆவார்.

63 வயதாகும் அஜய் பங்கா தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.