Brahmapuram: கொச்சி குப்பை கிடங்கு தீ: அணைக்கும் பணியில் கடற்படை ஹெலிகாப்டர்!
Kochi Fire Accident: தீ விபத்து குறித்து உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை கொச்சி மாநகராட்சி அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்றனர்.
கேரள மாநிலம் பிரம்மபுரத்தில் உள்ள கொச்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சி திங்கள்கிழமையும் தொடர்ந்த நிலையில், இந்திய கடற்படை தனது ஹெலிகாப்டர்களை அனுப்பி பாரிய தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த மார்ச் 2 ஆம் தேதி கொச்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது, தொடர்ந்து தீ பரவியதால் இன்னும் முழுமையாக தீ அணைக்கப்படவில்லை.
முன்னதாக சனிக்கிழமையன்று, கேரள அரசு கூட்டம் நடத்தி, எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரம் கழிவு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்க பேரிடர் கால அணுகுமுறையை ஆராய முடிவு செய்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது.
கேரள அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தீயை அணைப்பதற்கான முயற்சிகள் மற்றும் யோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின் பிரம்மபுரம் தீ விபத்து குறித்து நடந்த கூட்டத்தில் கேரள அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் பிற மாநில மற்றும் மத்திய அரசின் அமைப்புகள் கலந்து கொண்டனர்.
அதில் எடுக்கப்பட்ட முடிவுகளில் அடிப்படையில் , மீட்புப் பணி தொடங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை கொச்சியில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மற்றும் சட்டம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பி ராஜீவ் ஆகியோர் எர்ணாகுளம் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் மற்றொரு சந்திப்பை நடத்தினர்.
தீ விபத்து குறித்து உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை கொச்சி மாநகராட்சி அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்றனர். இதுவரை தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.
இந்நிலையில் தான் பிரம்மபுரம் கழிவு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்திய கடற்படை ஹெலிகாப்டர்கள் வரைவழக்கப்பட்டுள்ளன. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
டாபிக்ஸ்