Covid-19 Updates: தினம்தோறும் பாதிப்பு அதிகரிப்பு.. ஒரே நாளில் இந்தியாவில் திடீரென அதிகரித்த கொரோனா!
COVID-19: தற்போது குணமடைவோர் விகிதம் 98.67 சதவீதமாக உள்ளது. தினசரி பாசிட்டிவ் விகிதம் 5.46 சதவீதமாக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,591 ஆகியுள்ளது. இதனை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
நேற்று வரை இந்த வைரஸுக்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 63,562-ஆக இருந்தது. இன்று 65,286-ஆக அதிகரித்துள்ளது.
தற்போது குணமடைவோர் விகிதம் 98.67 சதவீதமாக உள்ளது. தினசரி பாசிட்டிவ் விகிதம் 5.46 சதவீதமாக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முகக்கவசம் அணிவதும், அவ்வப்போது கைகளை சோப் போட்டு கழுவிக் கொள்வதும், தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதுமே கொரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் வழியாகும்.
நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலையெடுத்துள்ளது. 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகமெங்கும் சிறு கிராமங்களைக் கூட விட்டு வைக்காமல் கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கியது.
லட்சக்கணக்கான மக்கள் இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
பல குழந்தைகள் இளம் பெற்றோரை இழந்து தவித்தனர். முதியோர்கள், சர்க்கரை நோயாளிகள் என நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிந்தன.
நுரையீரலில் குடியிருக்கும் வைரஸ் என்தால் இந்த வைரஸால் பாதிக்கப்படும் நபர்கள் மூச்சு விட சிரமம் எதிர்கொள்கின்றனர்.
ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டது. பின்னர், அதுவும் சரி செய்யப்பட்டது.
ஒருவழியாக கொரோனா வந்தால் போரிடுவதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. கோவாக்சின், கோவிஷீல்டு என தடுப்பூசிகள் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டன.
பொது முடக்கத்தால் மக்களின் பொது வாழ்க்கை முடங்கியது. எல்லாம் சரியானதாக தோன்றினாலும், கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்பது என்னவோ உண்மை.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்