இந்தியாவில் 2022 கார் விற்பனை வேற லெவல்! Mercedes-Benz CEO ஓலா சிறப்பு பேட்டி
’’இந்தியாவின் மொத்த கார் விற்பனையில் ஒரு சதவிதம் உள்ள ஆடம்பரப் வாகன சந்தை அடுத்த 10 ஆண்டுகளில் மிகப் பெரியதாக இருக்கும்’’
மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஓலா கலெனியஸ் அளித்த நேர்காணலில், கடந்த 2022 ஆம் ஆண்டில் உலக அளவில் Mercedes-Benz கார் நிறுவனம் மிக வேகமாக வளரும் சந்தையாக இந்தியா இருந்ததாக தெரிவித்துள்ளார்.
கேள்வி: - மேற்கத்திய நாடுகளின் சந்தைகள் மந்தம் அடைந்து வரும் வேளையில் இந்தியாவின் பயணிகள் வாகன சந்தையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, பென்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய வணிகத்தின் இந்தியாவின் பங்கு என்ன?
பதில்:- கோவிட் தொற்று, செமிகண்டக்டர் மீதான கட்டுப்பாடுகள், உக்ரைன் போர், ஐரோப்பாவில் எரிசக்தி சந்தையில் ஏற்படும் விளைவுகள் உள்ளிட்ட சம்பவங்களால், கடந்த மூன்று ஆண்டுகளாக உலகச் சந்தைகளில் இயல்பை விட குறைவான வாய்ப்புகளையே நாங்கள் பெற்றுள்ளோம். உண்மையில் 2022 ஆம் ஆண்டில் எங்களின் வேகமாக வளரும் சந்தையாக இந்தியா இருந்தது.
பெங்களூரில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது ஜெர்மனியைத் தவிர, உலகின் இரண்டாவது பெரிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையமாக உள்ளது, அதாவது ஒவ்வொரு மெர்சிடஸிலும் ஜெர்மனியை தவிர இந்தியாவின் பாகமும் உள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் மென்பொருள் ஆகியவற்றில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.
நாங்கள் இங்கு மின்சார வாகன உற்பத்தியிலும் ஒரு அடி எடுத்து வைத்துள்ளோம். இந்தியா, தற்போது 3.8 மில்லியன் வாகன சந்தையாக உள்ளது இதில் சுமார் ஒரு சதவிதம் பிரீமியம் எனப்படும் ஆடம்பரப் வாகன சந்தை உள்ளது, மேலும் அந்த ஒரு சதவீத ஆடம்பர வாகன சந்தையில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் அந்த சந்தை மிகப் பெரியதாக இருக்கும். செயல்பாட்டு பக்கத்தில், புனேவில் உள்ள எங்கள் தயாரிப்பு தளத்தில், நாங்கள் அதிக முதலீடு செய்துள்ளோம்.
கேள்வி:- இந்த ஆண்டும் அதே வளர்ச்சியை இந்தியா தொடர முடியும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: இது நல்ல வளர்ச்சியின் மற்றொரு ஆண்டாக இருக்கும் என்று நான் எச்சரிக்கை உடன் நம்பிக்கையை கொண்டுள்ளேன்.
இந்தியா நிச்சயமாக எங்களுக்கு ஒரு மையப்புள்ளி. 2023ல் எனது முதல் பயணம் இந்தியாவாக அமைந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியம் மிகவும் முக்கியமானது, மேலும் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்வோம்.
கேள்வி:- 2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்து சந்தைகளிலும் மின்சார வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய Mercedes-Benz உறுதியளித்துள்ளது. உலகளாவிய விநியோகம் மற்றும் பேட்டரிகளுக்கான மூலப்பொருட்களை பெறுவதில் உள்ள பிரச்னைகளில் என்ன சவால்களை எதிர்பார்க்கிறீர்கள்?
பேட்டரி மூலப்பொருட்களுக்காக நாங்கள் ஆழமான தேடல் பயணத்தில் இருக்கிறோம், இது மிக முக்கியமான விஷயமாகவும், பூஜ்ஜிய உமிழ்வை நோக்கி செல்லும் மிகப்பெரிய தொழில்துறை பணியாகவும் இருக்கும். 100 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டமைக்கப்பட்ட ஒரு தொழில்துறை தடத்தை முற்றிலும் புதியதாக மாற்றுவது ஒரு கடினமான பணி, எனவே, நாங்கள் இப்போது மூலப்பொருளின் ஆதாரம் வரை அனைத்து வழிகளிலும் ஈடுபடுகிறோம்.பூமியில் போதுமான லித்தியம் உள்ளது.
டாபிக்ஸ்