IND Vs AUS Final: அகமதாபாத் நகரில் ரூ.2 லட்சத்தை தொட்ட ரூம் வாடகை
ஐடிசி நர்மதா மற்றும் ஹயாட் ரீஜென்சி போன்ற ஹோட்டல்களின் ஆன்லைன் கட்டணம் போட்டியின் இரவில் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இதையொட்டி, குஜராத்தின் அகமதாபாத்தில் ஹோட்டல் அறை கட்டணம் மற்றும் நகரத்திற்கான விமான கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
செய்தி நிறுவனமான PTI இன் அறிக்கையின்படி, போட்டியின் இரவுக்கான ஹோட்டல் அறை கட்டணங்கள் நகரத்தில் உள்ள சிறந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ரூ. 2 லட்சம் வரை உயர்ந்துள்ளன, மற்ற ஹோட்டல்களும் அவற்றின் கட்டணங்களை ஐந்து முதல் ஏழு மடங்கு வரை உயர்த்தியுள்ளன.
உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியாவில் மட்டுமின்றி, துபாய், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் போட்டியைக் காண வர விரும்புகிறார்கள் என்று ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் அசோசியேஷன் கூட்டமைப்பு தலைவர் கூறியதாக பிடிஐ மேற்கோளிட்டுள்ளது.