IIT Madras Student Found Dead: ஆந்திர எல்லையில் தண்டவாளம் அருகே இருந்த ஐஐடி மெட்ராஸ் மாணவரின் சடலம்
அந்த மாணவர் வளாகத்தை விட்டு அக்டோபர் 3 அன்று வெளியேறிவிட்டார் என ஐஐடி-எம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த சென்னை ஐஐடி மாணவர், ஆந்திரப் பிரதேச எல்லையில் ரயில் தண்டவாளம் அருகே நேற்று இரவு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இவர் மெட்டலர்ஜிகல் & மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங் துறையில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இதுதொடர்பாக ஐஐடி மெட்ராஸ் தனது மாணவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளதாவது:
மாணவரின் மரணம் துயரமானது மற்றும் அகால மரணம் ஆகும். இந்த மரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த மாணவர் வளாகத்தை விட்டு அக்டோபர் 3 அன்று வெளியேறிவிட்டார்.
இந்த துரதிர்ஷ்டவசமான தருணத்தில் அந்த மாணவரின் குடும்பத்தினரின் தனியுரிமையை அனைவரும் மதிக்க வேண்டும் என நிறுவனம் கேட்டுக் கொள்கிறது என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவரின் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை ஐ.ஐ.டி மெட்ராஸ் மாணவர்கள் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தற்போது இந்த மாணவரும் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிறகு ஐஐடி-எம் வளாகம் மீண்டும் திறக்கப்பட்டபோது, "முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளால்" தங்களுக்கு சவால் இருந்தது என அதன் இயக்குநர் வி.காமகோடி தெரிவித்தார்.
ஐஐடி-எம்-இன் 64வது நிறுவன நாளில் "ஹேப்பினஸ்" வெப்சைட் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின்மனநிலை முக்கியம் என்பதை உணர்ந்த ஐ.ஐ.டி.-எம் நிறுவனம் இந்த வெப்சைட்டை தொடங்கியது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்