HT Tech SPL: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் பிரத்யேக செயலி!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Tech Spl: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் பிரத்யேக செயலி!

HT Tech SPL: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் பிரத்யேக செயலி!

Manigandan K T HT Tamil
Dec 25, 2023 09:15 AM IST

பெருவழியானது அடர்ந்து காடுகளுக்குள் அமைந்துள்ளது. வன விலங்குகள் நடமாட்டம் மிக அதிகமாக இருப்பதால், கேரளா வனத் துறையினர் இந்தப் பாதையை எப்போதும் கண்காணித்து வருகின்றனர்.

ஐய்யன் செயலி
ஐய்யன் செயலி (googleplaystore)

பெருவழி, சிறு வழி என இரண்டு பாதைகளைப் பயன்படுத்தி சுவாமி ஐய்யப்பனை பக்தர்கள் தரிசிக்கின்றனர்.

உடலில் வலிமையும் போதிய நேரமும் இருப்பவர்கள் பெரிய பாதையை தேர்ந்தெடுத்து யாத்திரை செல்கின்றனர்.

பெருவழி என்பது எருமேலியில் தொடங்கி சபரிமலை வரை 56 கிலோ மீட்டர் தொலைவு ஆகும். ஆனால், சிறு வழியான பம்மையில் இருந்து சபரிமலை 7 கிலோ மீட்டர் தூரம் தான்.

பெருவழிய சுவாமி ஐயப்பன் சபரிமலைக்கு சென்று யாத்திரை வழி என்பது ஐதீகம். இதனால், பெரும்பாலான பக்தர்கள் பெருவழியை பயன்படுத்தி ஐயப்பனை தரிசிக்க யாத்திரையாக செல்கின்றனர்.

பெருவழியானது அடர்ந்து காடுகளுக்குள் அமைந்துள்ளது. வன விலங்குகள் நடமாட்டம் மிக அதிகமாக இருப்பதால், கேரளா வனத் துறையினர் இந்தப் பாதையை எப்போதும் கண்காணித்து வருகின்றனர்.

குறிப்பிட்ட இடத்தை தாண்டி சென்றுவிட்டால் அடர்ந்த காட்டுக்குள் பக்தர்கள் சென்றுவிட வாய்ப்பிருக்கிறது.

இதனால், மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிகள் செல்ல வேண்டியது அவசியம். அவர்களுக்கு உதவி புரியும் வகையில் ஐய்யன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெரிய வழியில் கிடைக்கும் வசதிகள், குடிநீர் கிடைக்கும் இடம், தங்கும் இடம் போன்ற பல விவரங்கள் இந்தச் செயலியில் இருக்கிறது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் இந்தச் செயலியைப் பக்தர்கள் பயன்படுத்தலாம்.

ஐய்யன் செயலியில் உள்ள அம்சங்கள்
ஐய்யன் செயலியில் உள்ள அம்சங்கள்

பெரியார் புலிகள் காப்பகம் மற்றும் சபரிமலை பற்றிய தகவல்களும் இந்தச் செயலியை கட்டுரை வடிவில் இடம்பெற்றுள்ளன. பெரிய பாதையில் செல்லும்போது செய்யக் கூடாதவை குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர, ஒரு நாளில் சந்நிதானம் திறக்கும் நேரம், அபிஷேக நேரம், மீண்டும் சந்நிதானம் நடை சாத்தப்படும் நேரம் போன்ற தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

சபரிமலை குறித்த சமீபத்திய செய்திகளை அதற்கென கொடுக்கப்பட்ட ஆப்ஷனை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். View Routes-ஐ க்ளிக் செய்தால் 5 பாதைகளும் சந்நிதானத்தை அடைவதற்கான தொலைவு மற்றும் காலத்தையும் காண்பிக்கிறது.

மேலும், வனத்துறை, தீயணைப்பு நிலையம், சுகாதார ஆய்வாளர் அலுவலகம், மின்சார அலுவலகம், போக்குவரத்து அலுவலகம், மருத்துவத் துறை, காவல் துறை, ரயில்வே வினவல் மையம் ஆகியவற்றின் தொலைபேசி எண்களையும் இந்தச் செயலி வாயிலாக நம்மால் அறிந்து கொண்டு தேவை ஏற்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பெரிய பாதையில் சுவாமி ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு மிகுந்த உதவி புரியும் செயலியாக ஐய்யன் செயலி திகழும் என்றால் அது மிகையல்ல!

இந்தச் செயலியை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கைப் பயன்படுத்தி உங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.