தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Ht Tech Spl Ride An Auto At A Reasonable Rate Download This App

HT Tech SPL: நியாயமான கட்டணத்தில் ஆட்டோ சவாரி பண்ணனுமா.. இந்த செயலியை டவுன்லோடு பண்ணுங்க

Manigandan K T HT Tamil
Jan 19, 2024 06:30 AM IST

இதில் நியாயமான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருச்சி, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி போன்ற நகரங்களில் ஏற்கனவே செயல்பட்டு வரும் இந்த செயலி சேவை தற்போது சென்னையிலும் வந்துவிட்டது.

குறைந்த கட்டத்தில் ஆட்டோ சவாரி
குறைந்த கட்டத்தில் ஆட்டோ சவாரி (GOOGLEPLAYSTORE)

ட்ரெண்டிங் செய்திகள்

'சார் எவ்ளோ அமெளன்ட் காட்டுது. மேல கொஞ்சம் போட்டுக் கொடுங்க'

தற்போது இருக்கும் செயலிகளில் ஆட்டோ புக் செய்தால் முதலில் நாம் ஆட்டோ ஓட்டுநர்களிடம் இருந்து கேட்கும் முதல் குரல் இதுவாகவே இருக்கும்.

சிலர் மட்டுமே, 'சார், லொக்கேஷன் கரெக்டா' என கேட்பார்கள்.

'சிலர் மழை, வெயில் பாராமல் பாடுபடுகிறார்கள், மேலே சேர்த்து போட்டுக் கொடுப்போம்' என சில பயணிகள் கேட்கும் கட்டணத்தை கொடுக்கிறார்கள்.

'சிலரோ அந்த அளவுக்கு வசதி இருந்தா நான் ஏன் ஆப்ல புக் பண்ண போறேன். ரன்னிங் ஆட்டோவே எடுத்துப்பேனே. ஆப்ல இருக்கற அமெளன்ட்டுக்கு மேல 1 பைசா கூட கொடுக்க முடியாது. வரலைனா கட் பண்ணிக்கோங்க' என கூறும் பயணிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சிலர் 'நியாயம், தர்மம் இப்ப கிடையாது, எல்லாமே கொள்ளை தான்னு' புலம்பிட்டு நகர்ந்துடுவாங்க.

இதில் நீங்க யாரா இருந்தாலும், இப்போ நீங்க படிக்கப் போற கட்டுரை உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்னு நம்பலாம்.

நியாயமான கட்டத்தை வாங்குற ஆட்டோ புக்கிங் ஆப் இப்போ வந்திருக்கு. அதை பற்றி பார்ப்போம் வாங்க.

தமிழ்நாடு மீட்டர் ஆட்டோ செயலி என்ற ஒரு செயலி (APP) புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலி ஓலா, உபேர், ராபிடோ போன்று பீக் ஹவர்ஸில் கூடுதல் கட்டணத்தை வசூலிக்காது. இதில் நியாயமான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருச்சி, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி போன்ற நகரங்களில் ஏற்கனவே செயல்பட்டு வரும் இந்த செயலி சேவை தற்போது சென்னையிலும் வந்துவிட்டது.

சில கட்ட சோதனை முயற்சிகளுக்கு பிறகு தற்போது சென்னைவாசிகளின் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி ஆட்டோ புக் செய்தால் அடிப்படை கட்டணம் முதல் 1.8 கி.மீ.-க்கு ரூ.49 வசூலிக்கப்படும். கூடுதலாக ஒவ்வொரு கி.மீ., பயணத்திற்கும் ரூ.16 கூடுதலாக செலுத்த வேண்டும்.

செயலியில் உள்ள அம்சங்கள்
செயலியில் உள்ள அம்சங்கள் (googleplaystore)

இதுதவிர, வெயிட்டிங் சார்ஜ் நிமிடத்திற்கு ரூ.1 வசூலிக்கப்படும். இது, டிராஃபிக் சிக்னல்ஸ், பயணிகளுக்காக காத்திருக்கும் நேரம், செல்லும் வழியில் கடைகளில் நிறுத்துதல், உணவகத்திற்கு நிறுத்தி சாப்பிடுதல் என அனைத்துக்கும் பொருந்தும்.

சராசரியாக, 5 கி.மீ. தொலைவுக்கு பயணிக்க நீங்கள் ரூ.110 செலுத்த வேண்டியது இருக்கும். இந்தச் செயலியை நிர்வகிக்கும் நிறுவனம் ஆட்டோ ஓட்டுநர்களிடம் இருந்து ரூ.9 சேவைக் கட்டணமாக பெற்றுக் கொள்ளும்.

இதில் எந்தவொரு கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. உதாரணத்திற்கு 5 கி.மீ. பயணத்திற்கு வசூலிக்கப்படும் ரூ.110 கட்டணம் என்றால் ஆட்டோ ஓட்டுநருக்கு சேவைக் கட்டணம் போக மீதி ரூ.101 கிடைக்கும்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்