HT Tech SPL: டிஜிட்டல் கரன்சி வந்தாச்சு.. இந்த பேங்க்கில் வாடிக்கையாளர் என்றால் இப்போதே பயன்படுத்தலாம்!-ht tech spl be a part of central bank digital currency pilot - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Tech Spl: டிஜிட்டல் கரன்சி வந்தாச்சு.. இந்த பேங்க்கில் வாடிக்கையாளர் என்றால் இப்போதே பயன்படுத்தலாம்!

HT Tech SPL: டிஜிட்டல் கரன்சி வந்தாச்சு.. இந்த பேங்க்கில் வாடிக்கையாளர் என்றால் இப்போதே பயன்படுத்தலாம்!

Manigandan K T HT Tamil
Dec 30, 2023 07:15 AM IST

இதில் உங்கள் பணம் அனைத்தும் டிஜிட்டல் வழியில் உங்களிடம் இருக்கப் போகிறது. இதனால், நீங்கள் கையில் ரொக்கத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

இது செயலி உலகம்
இது செயலி உலகம்

இப்போதே படித்தவர்களில் பெரும்பாலானோர் யுபிஐ பயன்படுத்தி பரிவர்த்தனை மேற்கொள்ள தொடங்கிவிட்டோம். டீ கடை முதல் பெரிய கடைகள் வரை யுபிஐ பரிவர்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

இதில் உங்கள் பணம் அனைத்தும் டிஜிட்டல் வழியில் உங்களிடம் இருக்கப் போகிறது. இதனால், நீங்கள் கையில் ரொக்கத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இதனால், திருட்டு பயம், தொலைந்துபோதல் என்பது குறித்து கவலை கொள்ள தேவையில்லை. வணிக நிறுவனங்கள் எந்தவித கூடுதல் கட்டணமுமின்றி உடனடியாக செட்டில்மென்ட்டை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறலாம் என்று ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் ரூபாய் என்பது உங்கள் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய நாணயத்தின் மின்னணு பதிப்பாகும். நீங்கள் CBDC வாலட்டை ஏற்றலாம் மற்றும் உங்கள் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் சில நொடிகளில் வாலெட் பேலன்ஸை மீட்டெடுக்கலாம்.

தற்போது, 13 வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை வழங்கி வருகிறது. UPI உடனான இயங்குதன்மையுடன், CBDC பயனர்கள் இப்போது நாடு முழுவதும் உள்ள எந்த UPI QR இல் (வியாபாரிகள் அல்லது தனிநபர்கள்) பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் பின்வரும் 13 வங்கிகளில் ஏதேனும் ஒரு வாடிக்கையாளரா என்பதைச் சரிபார்க்கவும்.

 

செயலியில் உள்ள அம்சங்கள்
செயலியில் உள்ள அம்சங்கள்

எஸ்பிஐ - eRupee by SBI, ஐசிஐசிஐ- Digital Rupee By ICICI Bank, IDFC- IDFC First Bank Digital Rupee, YES வங்கி- Yes Bank Digital Rupee, HDFC வங்கிக்கு HDFC Bank Digital Rupee, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு Digital Rupee By UBI, பாங்க் ஆஃப் பரோடா என்றால் Bank of Baroda Digital Rupee, கோடக் வங்கி என்றால் Digital Rupee by Kotak Bank, கனரா வங்கிக்கு Canara Digital Rupee, ஆக்சிஸ் வங்கிக்கு Axis Mobile Digital Rupee, IndusInd வங்கிக்கு Digital Rupee by IndusInd Bank, PNB என்றால் PNB Digital Rupee, ஃபெடரல் வங்கிக்கு Federal Bank Digital Rupee ஆகிய செயலிகளை நீங்கள் ஆப்பிள் ஸ்டோர் அல்லது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வங்கிகளில் ஏதேனும் ஒரு வாடிக்கையாளராக நீங்கள் இருந்தால், அந்தந்த வங்கியின் டிஜிட்டல் ரூபாய் செயலியை உங்கள் மொபைலில் Playstore அல்லது Appstore இலிருந்து பதிவிறக்கவும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.