HT Tech SPL: ரூ.5 லட்சம் மதிப்பில் உத்தரவாதமளிக்கப்பட்ட இலவச சிகிச்சை.. ஆயுஷ்மான் அட்டையை உருவாக்க உதவும் செயலி!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Tech Spl: ரூ.5 லட்சம் மதிப்பில் உத்தரவாதமளிக்கப்பட்ட இலவச சிகிச்சை.. ஆயுஷ்மான் அட்டையை உருவாக்க உதவும் செயலி!

HT Tech SPL: ரூ.5 லட்சம் மதிப்பில் உத்தரவாதமளிக்கப்பட்ட இலவச சிகிச்சை.. ஆயுஷ்மான் அட்டையை உருவாக்க உதவும் செயலி!

Manigandan K T HT Tamil
Dec 25, 2023 09:17 AM IST

தொழில்நுட்பத்தின் உதவியுடன் இணைந்து இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆயுஷ்மான் பாரத் செயலி
ஆயுஷ்மான் பாரத் செயலி (Google play store)

தொழில்நுட்பத்தின் உதவியுடன் இணைந்து இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டம் இந்திய அரசாங்கத்தின் தேசிய சுகாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இது செப்டம்பர் 2018 இல் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. அந்த அமைச்சகம் பின்னர் திட்டத்தை நிர்வகிப்பதற்கான ஒரு அமைப்பாக தேசிய சுகாதார ஆணையத்தை நிறுவியது. இது மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய திட்டமாகும், இது மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் கூட்டாக நிதியளிக்கப்படுகிறது. 50 கோடி (500 மில்லியன்) மக்களுக்கு சேவைகளை வழங்குவதன் மூலம் இது உலகின் மிகப்பெரிய அரசாங்க நிதியுதவி சுகாதாரத் திட்டமாகும். இந்தியாவில் குறைந்த வருமானம் கொண்டவர்கள் என வகைப்படுத்தப்பட்ட பயனர்களைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

10 கோடி குடும்பங்களுக்கு அல்லது 50 கோடி இந்தியர்களுக்கு சுகாதார காப்பீடு வழங்குதல், பொது மற்றும் தனியார் ஆகிய இரண்டிலும் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்குதல்; மருத்துவமனை அல்லது மருத்துவரின் அலுவலகம் மூலம் ரொக்கமில்லா கட்டணம் மற்றும் காகிதமில்லா பதிவுகளை வழங்குதல் இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.

ஆயுஷ்மான் அட்டையை உருவாக்குவதற்கான வழிகள்

  • கூகுள் பிளே ஸ்டோரில் Ayushman App-ஐ இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
  • பயனாளிகள் பட்டியலில் உங்களது பெயரை தேடுங்கள்
  • நீங்கள் தகுதி பெற்றிருப்பின் உங்கள் பெயர் காண்பிக்கும்
  • பின்னர் ஆதார் e-kyc-ஐ பூர்த்தி செய்யுங்கள். உடன் கேட்கப்படும் இதர விவரங்களையும் பதிவு செய்யுங்கள்.
  • இதன்பிறகு, ஆயுஷ்மான் அட்டையை டவுன்லோடு செய்யலாம்.

பட்டியலிடப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையை பயனாளிகள் பெறலாம். மருத்துவமனையில் சேரும் 3 நாட்கள் முதல் மருத்துவமனையில் சேர்ந்த பின் 15 நாள் வரையிலான காலத்திற்கு இலவச நோய் கண்டறிதல் மற்றும் மருந்துகள் வழங்கப்படும்.

ஆயுஷ்மான் பாரத் செயலியில் நிறைந்துள்ள அம்சங்கள்
ஆயுஷ்மான் பாரத் செயலியில் நிறைந்துள்ள அம்சங்கள் (googleplaystore)

இதுவரை 27 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 6 கோடிக்கும் அதிகமான சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

https://abha.abdm.gov.in/abha/v3/register இந்தத் தளத்திற்கு சென்று ஆதார் அல்லது டிரைவிங் லைசென்ஸ் விவரங்களை அளித்து ABHA எண்ணை உருவாக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.