Whatapp chat Hide Tips:இந்த எளிய ட்ரிக் போதும்! உங்கள் வாட்ஸ்அப் சாட்களை மறைக்க!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Whatapp Chat Hide Tips:இந்த எளிய ட்ரிக் போதும்! உங்கள் வாட்ஸ்அப் சாட்களை மறைக்க!

Whatapp chat Hide Tips:இந்த எளிய ட்ரிக் போதும்! உங்கள் வாட்ஸ்அப் சாட்களை மறைக்க!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 04, 2023 06:50 PM IST

வாட்ஸ்அப்பில் இந்த ட்ரிக்கை பயன்படுத்தினால் மற்றவர்கள் பார்க்க வேண்டாம் என கருதும் மெசேஜ்களை மறைத்து வைக்கலாம் (Hide செய்யலாம்). அந்த ட்ரிக்கை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வாட்ஸ்அப்பில் உள்ள சாட்களை Hide செய்வதற்கான எளிய ட்ரிக்குகளை காணலாம்
வாட்ஸ்அப்பில் உள்ள சாட்களை Hide செய்வதற்கான எளிய ட்ரிக்குகளை காணலாம்

அந்த வகையில் உங்களது வாட்ஸ்அப் மெசேஜில் ஏதேனும் தனிப்பட்ட தகவல் சேமித்து வைக்கப்பட்டிருந்தால் அவை வேறு யாருக்கும் கசிந்துவிடக்கூடாது என நீங்கள் நினைக்கலாம். அந்த தகவல் தனிப்பட்ட மெசேஜாகவோ அல்லது சாட்டாகவோ கூட இருக்கலாம்.

அதேசமயம் வாட்ஸ்அப் பயன்பாடானது தற்போது பல்வேறு சாதனங்களிலும் இருப்பதால் ஏதாவது ஒரு சாதனத்தின் வழியே உங்களது வாட்ஸ்அப் மெசேஜ்கள், சாட்களை மற்றவர்கள் படித்து அவை லீக் ஆவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

இதை தடுப்பதற்கு மெசேஜ்களை மறைக்கும் அம்சமான Hide என்கிற  ஆப்ஷனை வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்யவில்லை. இருப்பினும் சில ட்ரிக்குகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் தனிப்பட்ட மெசேஜ் அல்லது சாட் மற்றவர்களுக்கு தெரியாதவாறு மறைத்து வைத்து கொள்ளலாம்.

வாட்ஸ்அப் மெசேஜ்களை மறைப்பதற்கு முதன்மையாக பயன்படும் அம்சமாக Archive அமைந்துள்ளது. Hide என்கிற ஆப்ஷன் வாட்ஸ்அப்பில் இல்லாத காரணத்தால், அதில் தற்போது இடம்பெற்று இருக்கும் Archive என்ற ஆப்ஷன் மூலம் தனிப்பட்ட அல்லது குரூப் சாட்களை வாட்ஸ்அப் மெயின் பக்கத்தில் இருந்து நீக்கிவிடலாம். அவ்வாறு செய்வதன் மூலம் அது Archived Folderஇல் பத்திரமாக ஒளிந்திருக்கும். பின் உங்களுக்கு எப்போது தேவையோ அப்போது வெளியே எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த ட்ரிக் உங்களது வாட்ஸ்அப் மெசேஜ் அல்லது சாட்களை தற்காலிகமாக ஒளித்து வைத்துக்கொள்வதற்கான ட்ரிக்காக அமைந்துள்ளது. இதை எவ்வாறு செய்வது என்பதை பார்க்கலாம்:

  • உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்த பின்னர், நீங்கள் மறைக்க விரும்பும் சாட் பெயரை ஹோல்ட் செய்யவும்.
  • அதில் தோன்றும் ஆப்ஷன்களில் Archive என்பதை தேர்வு செய்யவும். இதேபோல் நீங்கள் மறைக்க விரும்பும் அனைத்து சாட்களையும் Archive செய்து கொள்ளலாம்.
  • இந்த Archived சாட்களை பயன்படுத்த விரும்பினால் Archive பகுதிக்கு செல்ல வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க

Archive அம்சம் மூலம் வாட்ஸ்அப் சாட்களை மறைப்பதென்பது அடிப்படையான ட்ரிக்காக அமைந்துள்ளது. அதேசமயம் நீங்கள் உங்கள் சாட்களை Archive செய்ய விருப்பமில்லை என்றால் மற்றொரு ஆப்ஷனும் உள்ளது. Whatsapp Lock என்ற அந்த ஆபஷனை எப்படி பயன்படுத்துவதென்பதை காணலாம்.

  • வாட்ஸ்அப் ஓபன் செய்த பிறகு அதன் வலது மேல் பகுதியில் இருக்கும் மூன்று புள்ளிகளை டேப் செய்தால் தோன்றும் மெனுவில் Settingsஐ தேர்வு செய்யவும்
  • பின்னர் அதில் Privacy என்பதை தேர்வு செய்து அதன் உள்ளே Fingerprint Lock என்பதை ஆன் செய்யவும்.
  • அத்துடன் உடனடியாக இந்த பாதுகாப்பு அம்சம் எப்போது ஆக்டிவ் ஆக வேண்டும் என்பதையும் தேர்வு செய்து கொள்ளவும். இதில் Immediately, After 1 minute, After 30 minute ஆகியவற்றில் விரும்பமானவற்றை தேர்வு செய்யவும்.

தற்போது வரை வாட்ஸ்அப்பில் சாட் அல்லது மெசேஜ் Hide தொடர்பாக எந்தவொரு அப்டேட்டும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வழங்கப்படாத நிலையில், தற்போதைக்கு இந்த ட்ரிக்குகளை மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம்.

 

 

Whats_app_banner

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.