2025 ஆம் ஆண்டு விடுமுறை பட்டியல்.. விசேஷ தினங்கள் எப்போது.. மாணவர்களுக்கு ஜாலியான செய்தி!
Holidays 2025: மத்திய அரசு 2025 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை மற்றும் அனுமதி பெற்று விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்டிய நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டில் வரக்கூடிய விசேஷங்கள் மற்றும் விடுமுறைகளின் விவரங்கள் குறித்து இங்கு காண்போம்.
அனைவரும் மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய நிகழ்வாக புத்தாண்டு இருந்து வருகிறது. தற்போது 2025 ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கின்றது. வரும் ஆண்டாவது நமக்கு சிறப்பாக இருக்குமா என எண்ணக் கூடியவர்கள் இங்கு ஏராளம்.
குறிப்பாக பள்ளி குழந்தைகள் மற்றும் அலுவலக பணியில் இருப்பவர்கள் வரும் 2025 ஆண்டில் இருக்கக்கூடிய விடுமுறையை நோக்கி காத்திருப்பார்கள். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான பொது அரசு இதழில் விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகைகள் உள்ளிட்ட பல நாட்களுக்கு அரசு சார்பில் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த நாட்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மாநில மத்திய அரசு அலுவலகங்கள் விடுமுறையில் இருக்கும். மத்திய அரசின் விடுமுறை நாட்கள் மட்டும் அல்ல அது மாநில அரசின் சார்பிலும் விடுமுறைகள் அறிவிக்கப்படும்.
அந்த வகையில் மாநில அரசு விடக்கூடிய விடுமுறை நாட்கள் மற்ற மாநிலங்களுக்கு பொருந்தாது. தற்போது இந்த 2024 ஆம் ஆண்டு நிறைவடையும் தருவாயில் இருந்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு 2025 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை மற்றும் அனுமதி பெற்று விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்டிய நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டில் வரக்கூடிய விசேஷங்கள் மற்றும் விடுமுறைகளின் விவரங்கள் குறித்து இங்கு காண்போம்.
ஜனவரி மாதம்
- ஜனவரி 1 புதன்கிழமை ஆங்கில புத்தாண்டு
- ஜனவரி 10 வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி
- ஜனவரி 13 திங்கட்கிழமை போகி பண்டிகை
- ஜனவரி 14 செவ்வாய்க்கிழமை தைப்பொங்கல்
- ஜனவரி 15 புதன்கிழமை மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம்
- ஜனவரி 16 வியாழக்கிழமை உழவர் திருநாள்
- ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம்
பிப்ரவரி மாதம்
- பிப்ரவரி 11 செவ்வாய்க்கிழமை தைப்பூசம்
- பிப்ரவரி 26 புதன்கிழமை மகாசிவராத்திரி
மார்ச் மாதம்
- மார்ச் 12 புதன்கிழமை மாசி மகம்
- மார்ச் 13 வியாழக்கிழமை ஹோலி பண்டிகை
- மார்ச் 30 ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு
- மார்ச் 31 திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை
ஏப்ரல் மாதம்
- ஏப்ரல் 1 செவ்வாய்க்கிழமை வங்கி கணக்கு முடிவு
- ஏப்ரல் 10 வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி
- ஏப்ரல் 11 வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம்
- ஏப்ரல் 14 திங்கட்கிழமை தமிழ் புத்தாண்டு
- ஏப்ரல் 18 வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
- ஏப்ரல் 20 ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர்
- ஏப்ரல் 30 புதன்கிழமை அட்சய திருதியை
மே மாதம்
- மே 1 வியாழக்கிழமை தொழிலாளர்கள் தினம்
- மே 8 வியாழக்கிழமை மீனாட்சி திருக்கல்யாணம்
- மே 12 திங்கட்கிழமை சித்ரா பௌர்ணமி, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்
ஜூன் மாதம்
- ஜூன் 7 சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை
- ஜூன் 9 திங்கட்கிழமை வைகாசி விசாகம்
- ஜூலை மாதம்
- ஜூலை 6 ஞாயிற்றுக்கிழமை மொஹரம் பண்டிகை
- ஜூலை 24 வியாழக்கிழமை ஆடி அமாவாசை
ஆகஸ்ட் மாதம்
- ஆகஸ்ட் 3 ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு
- ஆகஸ்டு 8 வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம்
- ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை சுதந்திர தினம்
- ஆகஸ்ட் 16 சனிக்கிழமை கோகுலாஷ்டமி
- ஆகஸ்ட் 27 புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் மாதம்
- செப்டம்பர் 5 வெள்ளிக்கிழமை ஓணம் பண்டிகை மற்றும் மிலாடி நபி
அக்டோபர் மாதம்
- அக்டோபர் 1 புதன்கிழமை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை
- அக்டோபர் 2 வியாழக்கிழமை விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி
- அக்டோபர் 20 திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை
- அக்டோபர் 21 செவ்வாய்க்கிழமை கௌரி விரதம்
- அக்டோபர் 27 திங்கட்கிழமை சூரசம்ஹாரம்
டிசம்பர் மாதம்
- டிசம்பர் 3 புதன்கிழமை திருக்கார்த்திகை தீபம்
- டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை அனுமன் ஜெயந்தி
- டிசம்பர் 25 வியாழக்கிழமை கிறிஸ்துமஸ்
- டிசம்பர் 30 செவ்வாய்க்கிழமை வைகுண்ட ஏகாதசி
டாபிக்ஸ்