தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி இருக்கு..? - தனியார் மருத்துவமனை கொடுத்த அப்டேட் இதோ!

அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி இருக்கு..? - தனியார் மருத்துவமனை கொடுத்த அப்டேட் இதோ!

Karthikeyan S HT Tamil
Aug 13, 2023 08:05 AM IST

TN Minister Anbil Mahesh: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உடல்நிலை குறித்து பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு தருமபுரி வழியாக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரிமங்கலம் அருகே சென்ற போது அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பிய அமைச்சர் மருத்துவரின் பரிந்துரையின் படி அவர் பெங்களூரில் உள்ள நாராயணா ஹெல்த் சிட்டி என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்நிலையில், அமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய அறிக்கையை தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

அதில், அமைச்சருக்கு வயிற்றின் மேல்பகுதியில் வலி ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தற்போது அமைச்சர் அன்பில் மகேஸின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அந்த மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு வலி நிவாரணிகள் மற்றும் திரவங்கள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக பெங்களூரு நாராயணா ஹெல்த் சிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக,  இந்த தகவல் அறிந்து கிருஷ்ணகிரியில் அரசு நிகழ்வில் இருந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் உணவுதுறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி திமுக நிர்வாகிகள், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று நலம் விசாரித்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்