Diwali: ஆப்பிள் சிஇஓ டிம் குக், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பகிர்ந்த தீபாவளிக்கதைகள்!
ஆப்பிள் சிஇஓ டிம் குக், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஆகியோர் தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
தீபாவளி 2023: நாட்டில் விளக்குகளின் திருவிழாவான தீபாவளி உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், இந்திய ஐபோன் 15 பயனரான சந்தன் கன்னாவால் கிளிக் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு தனது தீபாவளி வாழ்த்துகளை அனுப்பினார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளதாவது, " தீபாவளி வாழ்த்துக்கள். அனைவரும் ஒன்றிணைந்து அரவணைப்பு, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியான தீபாவளியைக் கொண்டாடுங்கள். இந்த புகைப்படம் சந்தன் கண்ணா என்பவரால் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸில் எடுக்கப்பட்டது’ எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக அக்டோபரில், டிம் குக், ஆப்பிளின் வளர்ச்சிக்கு இந்தியாவின் சந்தைபெரிதும் உதவுகிறது எனக் கருத்து பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகை தொடர்பாக சுந்தர் பிச்சை:
மற்றொரு எக்ஸ் தளப்பதிவில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அனைவருக்கும் "தீபாவளி வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர், இந்த பண்டிகை கொண்டாட்டத்தில் பாரம்பரியங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், தீபாவளி தொடர்பாக நாம் தேடும்போது கிடைக்கும் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
சுந்தர் பிச்சை பகிர்ந்த இணைப்பில், 'ஏன் தீபாவளி அன்று எண்ணெய் குளியல்,' 'ஏன் தீபாவளி அன்று ரங்கோலி செய்கிறோம்', 'தீபாவளியில் ஏன் விளக்கு ஏற்றுகிறோம்', 'இந்தியர்கள் ஏன் தீபாவளி கொண்டாடுகிறோம்,' போன்ற கேள்விகள் அடங்கியிருந்தன. அதற்குண்டான பதிலும் அதில் இருந்தன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்