Hajj Yatra: ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் - இத படிங்க முதல்ல…!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hajj Yatra: ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் - இத படிங்க முதல்ல…!

Hajj Yatra: ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் - இத படிங்க முதல்ல…!

Priyadarshini R HT Tamil
Jan 20, 2023 12:00 PM IST

ஹஜ் பயணம் செல்ல விரும்புவோருக்கான பாஸ்போர்ட் உதவி மையம் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பயன்பெற முடியும்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒவ்வொரு இஸ்லாமியரும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது, தன்னால் இயலும் பட்சத்தில் மெக்கா மசூதியின் மையத்தில் அமைந்துள்ள காபாவை சுற்றி வர வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக இஸ்லாமியர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ஹஜ் பயணம் செல்ல விரும்புவோருக்கு உதவுவதற்காக ஆண்டுதோறும் அந்தந்த மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், இந்த ஆண்டும் ஹஜ் யாத்திரை செல்வோருக்காக திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் மூலம் சேவைகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

இதன்மூலம் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெற முடியும். 

 

இதுதொடர்பாக திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;

2023-ம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் விரைவில் தொடங்கப்படலாம் என ஹஜ் கமிட்டி அறிவுறுத்தி உள்ளது. எனவே ஹஜ் பயணிகளுக்கு உதவுவதற்காக திருச்சி தில்லைநகர் 7-வது கிராஸில் உள்ள மண்டல பாஸ்போர்ட்டில் உலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கணினி மூலம் படிக்கும் வகையிலான அச்சடிக்கப்பட்ட பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். 

எனவே ஹஜ் பயணம் செய்ய உத்தேசித்து பாஸ்போர்ட் இல்லாதவர்கள், 

பாஸ்போர்ட் இருந்தும், தேதி காலாவதியானவர்கள், இன்னும் ஒரு வருட காலத்திற்குள் பாஸ்போர்ட் காலாவதி ஆகும் நிலையில் உள்ளவர்களும், கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் வைத்திருப்போரும் இந்த சிறப்பு உதவி மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு

Phone No.: 0431-2707203/2707404 

Whatsapp No.: 7598507203 

E mail id: rpo.trichy@mea.gov.in 

Website: www.passportindia.gov.in 

Toll free No.: 1800 258 1800

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.