Google Doodle: புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் டாமியின் 110வது பிறந்தநாள்: கூகுள் கவுரவம்-google doodle celebrates japanese brazilian artist tommy ohtake 110th birthday - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Google Doodle: புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் டாமியின் 110வது பிறந்தநாள்: கூகுள் கவுரவம்

Google Doodle: புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் டாமியின் 110வது பிறந்தநாள்: கூகுள் கவுரவம்

Manigandan K T HT Tamil
Nov 21, 2023 10:38 AM IST

ஜப்பானிய-பிரேசிலிய கலைஞரான டாமியின் 110வது பிறந்தநாளை கூகுள் டூடுல் கொண்டாடுகிறது. அவர் தனது 40 வயதில் தனது ஓவிய வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஓவியக் கலைஞர் டாமி
ஓவியக் கலைஞர் டாமி (Google Doodle)

ஜப்பானின் கியோட்டோவில் 1913 இல் பிறந்த டாமி ஓஹ்டேக் தனது 40 வயது வரை தனது ஓவிய பயணத்தைத் தொடங்கினார், ஆனால் அவரது படைப்புகள் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. 1936 ஆம் ஆண்டில், 23 வயதில், ஓஹ்டேக் பிரேசிலில் தனது சகோதரரைச் சந்திக்க சென்றார், அந்த சமயத்தில் ஜப்பான் உலகப் போரில் சிக்கியதால், அவர் நீண்ட காலமாக தனது பிறந்த இடத்திற்குத் திரும்ப முடியாமல் பிரேசிலில் தனது குடும்பத்துடன் குடியேறினார்.

இருப்பினும், ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஓவியம் வரைவதில் ஈடுபாடு கொண்டார், மேலும் ஓஹ்டேக்கின் முதல் ஓவியக் கண்காட்சி 1957 இல் சலாவோ நேஷனல் டி ஆர்டே மாடர்னாவில் நடைபெற்றது.

டாமியின் சிறப்பு என்ன?

அவரது காலத்தின் பெரும்பாலான கலைஞர்களைப் போலல்லாமல், படைப்புகளில் துல்லியமாக இருக்க முயன்றார். 1957 இல் தொடங்கிய இந்த ஓவியப் பயணம், அடுத்த தசாப்தத்தில் டாமி பல தனிக் கண்காட்சிகளை நடத்தவும் பிரேசிலிய கலை நிலையங்களிலிருந்து பல்வேறு விருதுகளைப் பெற்றதும் வரலாறாக மாறியது.

பின்னர், டாமி பொதுக் கலையை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினார், இறுதியில் குவாருல்ஹோஸ், டோக்கியோ மற்றும் சாவ் பாலோ போன்ற பல பிரேசிலிய மற்றும் ஜப்பானிய நகரங்களுக்கு பெரிய அளவிலான  படைப்புகளை உருவாக்கி அளித்தார். அது இன்றும் முக்கியப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளது.

ஃபார்முலா 1 பந்தயம் மற்றும் திரைப்பட விழாவிற்கான விருதுகளை டாமி உருவாக்கினார். அவர் புத்தக விளக்கப்படங்களையும் வரைந்தார் மற்றும் ஒரு திரைப்படத் செட்டையும் வடிவமைத்தார்.

அவர் 2015 ம் ஆண்டு பிரேசிலில் 101 வயதில் காலமானார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.