தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Google Announces New Option For Better Experience

Google update: புதுமையான அனுபவத்தை தரும் ஆப்ஷன்கள் கூகுளில் அறிமுகம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 29, 2022 06:38 PM IST

கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர 'Search On' நிகழ்வில் சில புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதை பயன்படுத்துவதன் மூலம் புதுமையான விஷுவல் அனுபவத்தை பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

கூகுள் தேடலில் சில புதிய அம்சங்கள் அறிமுகம்
கூகுள் தேடலில் சில புதிய அம்சங்கள் அறிமுகம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் தேடுதல்களை மேற்கொள்வதற்கு பவ்வேறு புதிய மேம்பட்ட விஷயங்களை கூகுள் வழங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது புதிதாக Multi Search ஆப்ஷன் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் பல்வேறு விஷயங்களை நாம் தேடமுடியும். அதுவும் இமேஜ் அல்லது வாக்கியங்கள் என இரண்டையும் வைத்து தேடலாம் என்பது மற்றொரு கூடுதல் சிறப்பு.

அதேபோல் ஆங்கிலம் தவிர உலகில் உள்ள 70க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த தேடுதல்களை மேற்கொள்ள முடியும்.

அதேபோல் கூகுளில் ஏற்கனவே உள்ள Lens என்ற வசதியும் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் மட்டும் 8 மில்லியன் மக்கள் இந்த Lens வசதியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் பயன்படுத்தும் வாடிகையாளர்களுக்கு ஏற்றவாறு அதன் iOS ஆப்களிலும் இந்த கூகுள் தேடல் செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது.

பயனர்கள் ஒரு விஷயத்தை தேடும்போது அவர்களுக்கு தொடர்புடைய படங்களை காட்டுவதை விட, கூடுதலாக அந்த தேடல் சம்பந்தப்பட்ட விடியோ, புகைப்படம், இடம், முக்கிய சுற்றுலா தளங்கள் போன்ற அனைத்தையும் காட்டும் விதமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பிடித்த உணவுகளை தேடுபவர்களுக்கு அந்த உணவை காட்டுவது மட்டுமல்லாமல், அவை தேடும் நபரின் இருப்பிடத்துக்கு அருகே எங்கெல்லாம் கிடைக்கும், அதைப்போன்ற வேறு உணவுகளின் வெரைட்டி போன்றவையும் காட்டப்படும்.

கூகுள் தேடல் போன்று கூகுள் மேப் வசிதியும் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய வசதிகள் எல்லாம் தற்போது அனைத்து பகுதிகளுக்கும் இல்லாமல் குறிப்பட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . விரைவில் மற்ற நகரங்களுக்கு இவை படிப்படியாக மேம்படுத்தப்படும்.

முதல் கட்டமாக அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ், லண்டன், நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, டோக்கியோ போன்ற நகரங்களில் இந்த அப்டேட்கள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

WhatsApp channel