Crime : என்ன கொடுமை இது.. போதை மருந்துக்காக பெற்ற மகளை விற்ற தாய்.. அடுத்த நாளே சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட சோகம்!
போதை மருந்துக்காக தாய் தனது மூன்று வயது மகளை இளைஞர் ஒருவருக்கு விற்ற நிலையில் அந்த சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பராகுவே நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பராகுவே நாட்டில் ஆரேலியா சலினாஸ் என்ற 42 வயதான பெண் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இவர் போதை மருந்து வாங்க பணம் இல்லாததால் தனது 3 வயது சிறுமி லஸ் மைதாவை விற்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி ஆரேலியா சலினாஸ் போதை மருந்து வாங்க தனது மகளை பெட்ரோ ஜுவான் என்ற இளைஞருக்கு 10 பவுண்டுக்காக விற்றுள்ளார். இளைஞர் சிறுமியை வாங்கி சென்ற 24 மணி நேரத்தில் பாலடைந்த வீடு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி சடலத்தை பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து சிறுமியின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு இருந்த சிசிடிவி காட்சியை போலீசார் ஆய்வு செய்த போது சிறுமியை தோளில் சுமந்தபடி இளைஞர் வெளியேறுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
