Gautam Navlakha: கவுதம் நவ்லகாவை வீட்டுச் சிறையில் வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
கவுதம் நவ்லகாவை வீட்டுச் சிறையில் வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி, மாலத்தீவு தீ விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழப்பு உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
விசாரணை அமைப்புகள் ஒன்றிய அரசின் வளர்ப்பு பிராணிகளாக நடந்து கொள்வதாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட தனது மனைவி ரிவாபாவுக்கு வாய்ப்பு அளித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜோ நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 'தனது திருமணத்தை தடுத்து நிறுத்தும் சூனியக்காரி' என்று கூறி தாயை, மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவறான அரசு ஆட்சிக்கு வந்தால் இமாசலப் பிரதேசத்தின் முன்னேற்றம் தடைப்படும் என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
லாலு பிரசாத் யாதவின் மகள் தனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானம் அளிக்க முன்வந்துள்ளதாக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
டிவிஎஸ் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி உள்ளது.
பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான கெம்பேகவுடா வெண்கல சிலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, அதனை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் பிகாரிலிருந்து சர்வதேச எல்லைப் பகுதிகளுக்கு கடத்தப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
டொயோட்டா நிறுவனம் முதல் முறையாக Glanza மற்றும் HyRyder ஆகிய கார்களை சிஎன்ஜி(CNG) செக்மெண்டில் அறிமுகம் செய்துள்ளது.
பிகார் மாநிலத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக இன்று சென்றடைந்த குடியரசுத் தலைவர் திரெளெபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கத்தார் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க உள்ள அமெரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி உள்ளிட்ட 32 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அலகாபாத் உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுட்ளளது.
மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இந்தியர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைனுடனான போரில் ஒரு லட்சம் ரஷிய வீரர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரி மார்க் மில்லி தெரிவித்துள்ளார்.
அந்தமான், அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மாவோயிச அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள கவுதம் நவ்லகாவை வீட்டுச் சிறையில் வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி 160 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பெயர் இடம்பெற்றுள்ளது.
டாபிக்ஸ்