Gay Dating App:எவ்வளவு ஹைடெக் ... டேட்டிங் ஆப் மூலம் உடலுறவுக்கு அழைத்து பணம் பறித்த கும்பல் கைது!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஓரினச்சேர்க்கையாளர் டேட்டிங் ஆப் மூலம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஓரினச்சேர்க்கையாளர் டேட்டிங் ஆப் மூலம் உறவுக்கு அழைத்து வீடியோ எடுத்து மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு கும்பல் போலி ஐடி மூலம் ‘Blued’ என்ற பெயரில் ஓரின சேர்க்கையாளர் டேட்டிங் செயலியை உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் இளைஞர்களை அணுகி நட்பு அடிப்படையில் சாட் செய்திருக்கின்றனர்.
பின்னர் ஆசைவார்த்தை கூறி தன்பாலின உடலுறவில் விருப்பம் உள்ளதா? எனக் கேட்பார்கள். அப்படி விருப்பம் இருக்கிறது என சாட் செய்பவர்கள் விருப்பம் தெரிவித்தால், அவர்களை குறிப்பிட்ட தேதியில் ஒரு இடத்துக்கு வரச்சொல்வார்கள். அப்படி வரும் நபர்களுடன் நிர்வாணமாக உடலுறவு வைத்துக் கொள்வார்கள். அதை மற்றொருவர் மூலம் வீடியோ எடுத்துக் கொள்வார்கள்.
உடலுறவு முடிந்ததும், அந்த நபரிடம் இருந்து விலையுயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துவிடுவார்கள். மேலும், உடலுறவில் ஈடுபட்டதை வீடியோவாக படம் எடுத்து வைத்துள்ளோம். அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டல் விடுத்தும் பணம் பறித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சிலர் கல்யாண்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி இந்த மோசடி கும்பலை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கொண்ட தகவல்கள் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் கைது செய்யப்பட்ட கைது செய்யப்பட்டவர்கள் திலீப் என்கிற பிரத்யும்ன் சிங் (21), அருண் ராஜ்பூத் (22), விபின் சிங் (21), பவன் குமார் சிங் (22), பிரவீன் சிங் (20), பிரிஜேந்திர சிங் (19) என அடையாளம் காணப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், 1 லேப்டாப், 9 ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்