Rajasthan New CM: முதல் முறையாக எம்எல்ஏவான பஜன் லால் சர்மா ராஜஸ்தானின் புதிய முதல்வராக தேர்வு!
இன்று அதிகாலை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மூன்று பாஜக பார்வையாளர்கள், சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தை மேற்பார்வையிட ஜெய்ப்பூர் வந்தனர்.
சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்து முடிந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது பாஜக. முக்கிய மாநிலமான ராஜஸ்தானின் முதல்வராக சங்கனேர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ள பஜன் லால் சர்மாவை பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தேர்வு செய்தது.
முன்னதாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மூன்று பாஜக பார்வையாளர்கள் இன்று ஜெய்ப்பூருக்கு வந்து, முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தை மேற்பார்வையிட்டனர்.
மத்திய குழுவில் வினோத் தாவ்டே, சரோக் பாண்டே, ராஜஸ்தான் மாநில பாஜக பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த குழுவினரை சி.பி.ஜோஷி, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் வரவேற்றனர்.
இரண்டு முறை முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே முதல்வர் பதவிக்கு தகுதியானவர்களில் ஒருவராக இருந்தார். இவரே முதல்வராக வருவார் என்றும் பெரிய எதிர்பார்ப்பு இருந்துவந்தது.
இப்பதவிக்கான சாத்தியக்கூறுகள் யார் என்பதை பாஜக கடைசிவரை சஸ்பென்ஸாகவே வைத்திருந்தது. இருப்பினும், எம்.பி.யாக இருந்து எம்.எல்.ஏ.வாக மாறிய பாலக்நாத், ராஜே, கிரோரி லால் மீனா மற்றும் தியா குமாரி ஆகியோரின் பெயர்கள் அரசியல் வட்டாரங்களில் வலம் வந்தன.
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 199 தொகுதிகளில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்றது.
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில், முறையே மோகன் யாதவ் மற்றும் விஷ்ணு தியோ சாய் ஆகியோர் முதல்வராக அறிவிக்கப்பட்டனர்.
டாபிக்ஸ்