First budget of Modi 3.0: ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்! வருமான வரி உச்ச வரம்பு மாற்றப்படுமா? இதோ முழு விவரம்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  First Budget Of Modi 3.0: ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்! வருமான வரி உச்ச வரம்பு மாற்றப்படுமா? இதோ முழு விவரம்!

First budget of Modi 3.0: ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்! வருமான வரி உச்ச வரம்பு மாற்றப்படுமா? இதோ முழு விவரம்!

Kathiravan V HT Tamil
Jul 11, 2024 03:46 PM IST

Budget 2024: மூன்றாவது முறையாக பொறுப்பேற்று உள்ள மோடி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜூலை 22 முதல் தொடங்குகின்றது. வரும் ஜூலை 23ஆம் தேதி அன்று நிர்மலா சீதாராமன் மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்! வருமான வரி உச்ச வரம்பு மாற்றப்படுமா? இதோ முழு விவரம்!
ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்! வருமான வரி உச்ச வரம்பு மாற்றப்படுமா? இதோ முழு விவரம்!

குடியரசுத் தலைவர் உரையும் பட்ஜெட்டும்!

ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக கூறி இருந்த நிலையில், வர உள்ள பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்து உள்ளது. 

ஜனாதிபதி திரௌபதி முர்மு, பாராளுமன்றத்தில் தனது கூட்டு உரையில், வரவிருக்கும் பாராளுமன்ற அமர்வுகளில், முக்கிய பொருளாதார மற்றும் சமூக முடிவுகள் மற்றும் வரலாற்று நடவடிக்கைகள் மத்திய பட்ஜெட்டின் போது அறிவிக்கப்படும் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார்.

7ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் 

மத்திய நிதியமைச்சராக, நிர்மலா சீதாராமன் இதுவரை 6 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளார். 

இதன் மூலம் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்வின் சாதனையை எட்டிய இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார்.  இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் சீதாராமன், ஜூலை 2019ஆம் ஆண்டு முதல் ஐந்து முழுமையான பட்ஜெட்டுகளை தாக்கல் செய்து உள்ளார். 

முன்னாள் நிதியமைச்சர்களான மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, பி சிதம்பரம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரும் இதற்கு முன்னர் ஐந்து தொடர்ச்சியான பட்ஜெட்களை தாக்கல் செய்து இருந்தனர்.

பட்ஜெட் எதிர்பார்ப்புகள்

பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு, ரயில்வே மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பிற முக்கிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாத சம்பளம் பெறும் தனிநபர்களுக்கான வருமான வரி வரம்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது தற்போது ரூ.50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பு ரூ.50,000 முதல் ரூ.1,00,000 வரை உயர்த்தப்படும் என ஊகிக்கப்படுகிறது.

வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கான முக்கியக் கொள்கை வருமான வரிச் சட்டத்தின் 24(b) பிரிவின் கீழ் வரிச் சலுகைகளாக இருக்கலாம், வரவிருக்கும் பட்ஜெட்டில் அதற்கு இடமளிக்கலாம்.

புதிய பட்ஜெட், சமையல் எரிவாயு மீதான நேரடி பயன் பரிமாற்றம் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியங்கள் மூலம் பெண்களின் நல்வாழ்வை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பெண்களுக்கு, தள்ளுபடி செய்யப்பட்ட சுகாதார சேவைகள் வழங்கப்படுவதன் அடிப்படையில், சுகாதாரப் பாதுகாப்புக்கும் இதேபோன்ற முயற்சி எதிர்பார்க்கப்படுகிறது.

சேமிப்புக் கணக்குகளின் வட்டிக்கான வருமான வரி விலக்கு வரம்பை தற்போதைய ரூ.10,000-இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தவும் வாய்ப்பு உள்ளது.

வணிக நிறுவனங்கள் என்று வரும்போது, 100 க்கும் மேற்பட்ட சட்ட விதிகளை குற்றம் அற்றதாக மாற்றி அபராதம் விதிக்கும் நடைமுறைகளை கொண்டு வருவதன் மூலம் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் சுமையை குறைத்து இந்தியாவின் வணிகம் செய்வதற்கு எளிமயான வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:-

Twitter: https://twitter.com/httamilnews 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v 

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.