Fact Check: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆந்திர தேர்தலில் தோற்றதற்கு இது தான் காரணமா? - வைரல் வீடியோவின் உண்மை என்ன?
Fact Check, YSR congress: மக்களவைத் தேர்தலில் EVM இயந்திரங்கள் முறைகேடு காரணமாக YSR காங்கிரஸ் வாக்குகளை இழந்ததாக வைரலாகி வரும் வீடியோவின் உண்மை தன்மை பற்றி அறிந்துகொள்வோம்.
மக்களவைத் தேர்தலில் EVM இயந்திரங்கள் முறைகேடு காரணமாக YSR காங்கிரஸ் வாக்குகளை இழந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ்மீட்டர் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு காரணமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வாக்குகளை இழந்ததாக சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நீதி கேட்டு, உச்ச நீதிமன்றம் மற்றும் சிபிஐ விசாரணை கோரி போன்ற தலைப்புகளுடன் அந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்மீட்டர் தமிழ் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.
வைரல் வீடியோ
ஃபேஸ்புக் பயனர் ஒருவர் இந்த வீடியோவை பகிர்ந்து அதன் தலைப்பில், "ஆந்திரப் பிரதேச மக்கள் 2024 தேர்தல் முடிவுகள் தொடர்பாக நியாயம் கேட்கிறார்கள். உச்ச நீதிமன்றம் அல்லது ஆளுநரின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை அல்லது மறுவாக்கு எண்ணிக்கை கோருகிறோம். 2024ஆம் ஆண்டு ஆந்திர தேர்தல் முடிவுகளை சரிபார்க்க விவிபிஏடி சீட்டுகளை எண்ண வேண்டும் என்று நான் உட்பட ஆந்திர மக்கள் வலியுறுத்துகிறோம்." என குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைச் சரிபார்ப்பு
சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவின் உண்மை சரிபார்ப்பில், இந்த வீடியோ 2019 ஆம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டதாக நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது.
வீடியோவில் இருந்து முக்கிய பிரேம்கள் தலைகீழ் படத் தேடல் செய்யப்பட்டது. அப்போது, ஏப்ரல் 14, 2019 தேதியிட்ட ஏபிஎன் தெலுங்கு யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட வீடியோ என அது கண்டறியப்பட்டது. அந்த வீடியோவின் தலைப்பில், “VVPAT டிஸ்ப்ளே 7 வினாடிகளுக்கு பதிலாக 3 வினாடிகளுக்கு மட்டுமே காட்டுகிறது என தேர்தல் ஆணையத்திடம் ஹரி பிரசாத் புகார் அளித்துள்ளார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விரிவான அறிக்கையில், VVPAT 7 வினாடிகளுக்குப் பதிலாக 3 வினாடிகள் மட்டுமே காட்டப்படுவதாக ஹரி பிரசாத் ஊடகங்களிடம் பேசுவதைக் காணலாம். வீடியோவின் இந்த குறிப்பிட்ட பகுதி சமூக ஊடகங்களில் திருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக, 'தி க்விண்ட் செய்தி' நிறுவனத்தின் விரிவான அறிக்கை ஒன்று கண்டறியப்பட்டது. ஏப்ரல் 18. 2019 அன்று, “VVPAT கருவியில் ஒரு குறியீட்டு பிரச்னை உள்ளது ஆனால் தேர்தல் ஆணையம் அதனை கேட்க மறுக்கிறது: TDP ஹரி பிரசாத் வெமுரு” என தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்டது. நேஷனல் ஹெரால்டு மற்றும் பிசினஸ் ஸ்டாண்டர்டில் இருந்தும் இதே போன்ற அறிக்கைகள் கண்டறியப்பட்டது.
முடிவு என்ன?
வைரலாகும் இந்த வீடியோ 2024 ஆந்திர பிரதேச தேர்தலுடன் தொடர்புடையது அல்ல என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும் வைரலாகும் வீடியோ, 2019-ம் ஆண்டிற்கு முந்தையது மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை பற்றியது. சமீபத்திய தேர்தல் முறைகேடுகளை பரிந்துரைக்கும் வகையில் தற்போதைய சூழலில் வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என உறுதி செய்யப்பட்டது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்மீட்டர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
பொறுப்புத் துறப்பு
இந்தச் செய்தி முதலில் newsmeter இணையதளத்தில் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்