தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Excitel Collaborates With Ott Play To Launch Southern Ott Pack

OTT play: 17 ஓடிடி, 300 லைவ் சேனல்கள்..! மாஸ்ஸான திட்டத்தை ஓடிடி ப்ளேயுடன் இணைந்து அறிமுகம் செய்த எக்சைடெல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 12, 2024 05:42 PM IST

பிரபல ஓடிடி நிறுவனமான ஓடிடி ப்ளேயுடன் இணைந்துள்ளது எக்சைடெல் பிராட்பேண்ட் நிறுவனம். இதன் மூலம் புதிய தென்னிந்தியா ஓடிடி பேக்கையும் அறிமுகம் செய்துள்ளது.

எக்சைடெல் மற்றும் ஓடிடி ப்ளே இணைந்து தென்னிந்தியாவுக்கான ஓடிடி, லைவ் டிவி திட்டம் அறிமுகம்
எக்சைடெல் மற்றும் ஓடிடி ப்ளே இணைந்து தென்னிந்தியாவுக்கான ஓடிடி, லைவ் டிவி திட்டம் அறிமுகம்

ட்ரெண்டிங் செய்திகள்

வீடுகளுக்கான பிராட்பேண்ட் வசதியை தரும் புதிய நிறுவனமாக எக்சைடெல் உள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களான பெங்களுரு, ஹைதராபாத், மங்களுரு, குண்டூர், விஜயவாடா ஆகிய நகரங்களை குறிவைத்து புதிய பேக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக பல்வேறு ஓடிடி பிளாட்மார்ம்களின் சேவையை ஒருங்கிணைந்து ஒரே செயலியில் தரும் ஓடிடி ப்ளேயுடன் கைகோர்த்துள்ளது.

எக்சைடெல் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய திட்டம், பயனாளர்களின் பல்வேறு வகையான பொழுதுபோக்கு விருப்பங்கள் இணைந்த அதிவேக இணைய அணுகலை பூர்த்தி செய்கிறது.

மாத்துக்கு ரூ. 599, 12 மாத சந்தாவுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் தென்னிந்தியா ஓடிடி பிளான் பயனாளர்களை ஈர்க்கும் பல்வேரு அம்சங்களை கொண்டுள்ளது. இண்டர்நெட் வேகம் 400 Mbpsஇல் தடையில்லா சேவையை தருகிறது. இதனுடன் 17 பிரபல ஓடிடி தளங்கள், 300 லைவ் டிவி சேனல்களையும் பார்க்கலாம்.

இந்த திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சியில் எக்சைடெல் நிறுவன சிஓஓ வருண் பஸ்ரிச்சா கூறியதாவது: " தென் இந்தியாவுக்கான முதல் திட்டத்தை அறிமுகப்படுத்திவதில் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் தென் பகுதியில் இருக்கும் பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹோம் பிராட்பேண்ட் மற்றும் கேபிள் டிவி, டிடிஎச் சந்தாக்கள், விலை உயர்ந்த ஆட்-ஆன்களில் ஆகியவற்றிலிருந்து பலரும் விலக தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த திட்டத்தின் மூலம் ஒரேயொரு முறை உள்நுழைந்து, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷோக்களை பார்வையாளர்கள் அணுகலாம்.

தென் இந்தியாவுக்கான திட்டம் போல், வட இந்தியா பகுதி மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விரிவான திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.