Viral : நடுரோட்டில் லிப்லாக் கொடுத்து கொண்டே பைக்கில் சென்ற காதல்ஜோடி.. வீடியோ வைரல்.. திட்டிதீர்க்கும் நெட்டிசன்கள்!-excited lovers on the bike couple kissing on bike in jaipur video viral - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Viral : நடுரோட்டில் லிப்லாக் கொடுத்து கொண்டே பைக்கில் சென்ற காதல்ஜோடி.. வீடியோ வைரல்.. திட்டிதீர்க்கும் நெட்டிசன்கள்!

Viral : நடுரோட்டில் லிப்லாக் கொடுத்து கொண்டே பைக்கில் சென்ற காதல்ஜோடி.. வீடியோ வைரல்.. திட்டிதீர்க்கும் நெட்டிசன்கள்!

Divya Sekar HT Tamil
Sep 18, 2023 12:58 PM IST

ஜெய்பூரில் காதல் ஜோடி போக்குவரத்து நிறைந்த சாலையில் பைக்கில் லிப்லாக் செய்த படியே சென்ற வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுரோட்டில் லிப்லாக் செய்து கொண்டே பைக்கில் சென்ற காதல்ஜோடி
நடுரோட்டில் லிப்லாக் செய்து கொண்டே பைக்கில் சென்ற காதல்ஜோடி

தற்போதும் சமூக வலைதள பக்கத்தில் காதல் ஜோடி வீடியோ ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதைனை திட்டி தீர்த்து வருகின்றனர். பொதுவாக முக்கிய நகரங்களில் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் வீதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அப்படி தான் ராஜஸ்தானில் காதல் ஜோடி பைக்கில் அமர்ந்து போக்குவரத்து நிறைந்த சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் லிப் லாக் செய்தபடியே சென்றுள்ளனர். அதாவது ராஜஸ்தானில் ஜெய்பூரில் ஒரு இளம்ஜோடி ஓடும் பைக்கில் லிப்லாக் செய்து கொண்டே சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

அந்த வீடியோவில் ஒரு இளைஞர் பைக் ஓட்டுகிறார். அவர் சாலையை கவனைக்காமல் தனக்கு பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணை முத்தமிட்டு கொண்டு வாகனம் ஓட்டிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இது பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் பலர் கமெண்ட்டில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

அந்த ஜோடி ஹெல்மெட்டும் அணியவில்லை. இந்த வீடியோ வைரலானதை அடுத்து போக்குவரத்து போலீசார் அந்த பைக்கின் எண் மூலம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட இளைஞர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.