Electricity Bill: என்னது வெறும் 2 பல்புக்கு 1 லட்சம் மின் கட்டணமா?
மூதாட்டி வீட்டில் அதிகாரிகள் நேரில் வந்து சோதனை செய்தனர். அப்போது மீட்டரில் சில பிரச்சனை இருந்ததால் மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது. இதனால் மூதாட்டி இந்த பெரிய தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
தெலுங்கானாவில் வெறும் 2 பல்புகள் மட்டும் உள்ள பாட்டி வீட்டிற்கு 1 லட்சம் ரூபாய் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மின்சார செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிலும் அதிகரித்து வரும் மின் பயன்பாட்டை தொடர்ந்து அந்தந்த மாநில அரசுகள் மின் கட்டணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மின்சாரக்கட்டணமும் அதிகரித்து தான் வருகிறது. இதனால் ஏழை நடுத்தர மக்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். ஆனாலும் வெறும் 2 பல்பு இருக்கும் வீட்டிற்கு ஒரு லட்சம் மின் கட்டணம் என்றால் நம்பமுடிகிறதா?
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாக்யா நகரில் 90 வயது பாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும் மின்சார இணைப்பு கொடுக்க வேண்டும் என்ற பாக்கிய ஜோதி திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூதாட்டி தன் வீட்டில் இரண்டே இரண்டு பல்புகளை மட்டும் பயன்படுத்தி வருகிறார். அவருக்கு எப்போதும் மாதத்திற்கு 70 முதல் 80 ரூபாய் வரை மின் கட்டணம் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் திடீரென தற்போது 1 லட்சம் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்ட மூதாட்டி அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்த தகவல் பரவ துவங்கி உள்ளது . இந்த தகவல் அதிகாரிகளுக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து மூதாட்டி வீட்டில் அதிகாரிகள் நேரில் வந்து சோதனை செய்தனர். அப்போது மீட்டரில் சில பிரச்சனை இருந்ததால் மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது. இதனால் மூதாட்டி இந்த பெரிய தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதை திருத்தி அமைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மூதாட்டி நிம்மதி பெரு மூச்சு விட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்