Earthquake in Jammu kashmir: பாரமுல்லாவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது..உயிர்ச்சேதம் ஏதும் இல்லை
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Earthquake In Jammu Kashmir: பாரமுல்லாவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது..உயிர்ச்சேதம் ஏதும் இல்லை

Earthquake in Jammu kashmir: பாரமுல்லாவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது..உயிர்ச்சேதம் ஏதும் இல்லை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 20, 2024 02:29 PM IST

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

Earthquake in Jammu kashmir: பாரமுல்லாவில் இரண்டு முறை நிலநடுக்கம் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை ,
Earthquake in Jammu kashmir: பாரமுல்லாவில் இரண்டு முறை நிலநடுக்கம் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை ,

ரிச்சர் அளவுகோலில் 4.9 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் காலை 6:45க்கு ஏற்பட்டது. இரண்டாவது நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருள் சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் ஏதேனும் முன்னேற்றங்கள் ஏற்படுகிறதா என்று அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள்

34.17 வடக்கு அட்சரேகை மற்றும் 74.16 கிழக்கு தீர்க்கரேகையில் ஏற்பட்டதாகவும், வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் மையம் கொண்டிருந்தது.

அதிகாலை 6:52 மணிக்கு 34.20 வடக்கு அட்சரேகை மற்றும் 74.31 கிழக்கு தீர்க்கரேகையில் 4.8 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாரமுல்லாவில் அடுத்தடுத்து இரண்டு பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கங்களால் பீதியடைந்த மக்கள், வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்கம் காரணாக வீடுகளில் இருந்த பொருள்கள் அதிர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மிதமான நிலநடுக்கம் 

ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் மாநிலம் முசாஃபர்பாத்தில் கடந்த இரு நாள்களுக்கு முன் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவானது. முசாஃபர்பாத்தின் கிழக்கே சுமார் 73 கி.மீ. தொலைவிலும் 10 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

முன்னதாக, ஜூலை 12 பிற்பகலில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மதியம் 12:26 மணியளவில் நில அதிர்வு நடவடிக்கைகளை அறிவித்தனர். பாரமுல்லா பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் இந்தியாவின் பாதிப்பு

இந்தியா அதன் புவியியல் அமைப்பின் காரணமாக நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்தியா டெக்டோனிக் தட்டில் அமர்ந்திருக்கிறது, இது தொடர்ந்து யூரேசிய தட்டுடன் மோதுகிறது.

நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் மலைப்பாங்கான நிலப்பரப்பு காரணமாக நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மண்டலம் 5இல் வருகிறது, இது இந்தியாவின் பூகம்ப பாதிப்பு வரைபடத்தில் மிகவும் நில அதிர்வு செயலில் உள்ள பகுதியாகும்.

அமெரிக்காவில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாமண்ட் நகருக்கு தென்மேற்கே 23 கி.மீ தொலைவில் 11.7 கி.மீ ஆழத்தில் கடந்த 8ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது என அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 2.5 முதல் 4.1 ரிக்டர் அளவிலான பல பின்னதிர்வுகளும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது ஜம்மு - காஷ்மீரில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருக்கிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.