DVC Recruitment 2024: டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி - 66 JE, எக்ஸ்க்யூடிவ் ட்ரெய்னி பதவிகளுக்கான அறிவிப்பு வெளியீடு
DVC Recruitment 2024: டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி - 66 JE மற்றும் எக்ஸ்க்யூடிவ் ட்ரெய்னி பதவிகளுக்கான அறிவிப்பு வெளியீடு ஆகியுள்ளது.
DVC Recruitment 2024: தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன், என்பது சுருக்கமாக டி.வி.சி என அழைக்கப்படுகிறது. இதில் இளநிலை பொறியாளர் மற்றும் செயற்குழு பணிக்கான விண்ணப்பங்களை தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் நிறுவனம் வரவேற்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் டி.வி.சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான dvc.gov.in ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு இயக்க அறிவிப்பின் மூலம் நிறுவனத்தில் 66 பணியிடங்கள் நிரப்பப்படும்.
தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஜூலை 4, 2024 வரை ஆகும். இதன்மூலம் டிப்ளமோவில் இயந்திரவியல், எலக்ட்ரிக்கல், சிவில், கண்டோல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் சுரங்க சர்வே படித்தவர்களுக்கு, கணினி சார்ந்த தகுதித் தேர்வு நடத்தப்படும்.
தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனுக்கான தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்களுக்குக் கீழே படிக்கவும்.
காலியிட விவரங்கள்:
- JE Gr.II (Mech): 16 பணியிடங்கள்;
- JE Gr.II (Elec): 20 பணியிடங்கள்;
- JE Gr.II (C&l): 2 பணியிடங்கள்;
- JE Gr.II (CiviI): 20 பணியிடங்கள்;
- JE Gr.II (Comm): 2 பணியிடங்கள்;
- சுரங்க சர்வேயர்: 4 பணியிடங்கள்;
- Executive Trainee (Soil): 2 பணியிடங்கள்
தகுதி வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விரிவான அறிவிப்பில் கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பை அறிந்து கொள்ளலாம். ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு இந்த லிங்கினை கிளிக் செய்யவும். மேலும், எக்ஸ்கியூட்டிவ் ட்ரெயினிக்கு இந்த லிங்கினை கிளிக் செய்யவும்.
தேர்வு செயல்முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வுக்கு உட்படுத்தப்படுவர். தகுதி மற்றும் காலியிடங்களின் தேவையின் அடிப்படையில், ஆவணங்கள் சரிபார்ப்புக்கான வெற்றிகரமான வேட்பாளர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். எழுத்துத் தேர்வு இரண்டு மணி நேர கால அளவு கொண்ட கொள்குறி வினா வகையாக இருக்கும் (ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில் விருப்பங்கள் இருக்கும்).
விண்ணப்பக் கட்டணம்:
பொது/ஓபிசி (என்சிஎல்) / EWS பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் திருப்பிச் செலுத்த முடியாத விண்ணப்பக் கட்டணமாக ரூ .300 / -ஐ செலுத்த வேண்டும். SC/ST/PWBD/Ex-SM பிரிவுகள் & DVC துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக விண்ணப்பிக்க இணைப்பு:
எப்படி விண்ணப்பிப்பது:
- dvc.gov.in-ல் உள்ள DVC(Damodar Valley Corporation)-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
- வேலைவாய்ப்பு பக்கத்தைக் கிளிக் செய்யவும். அப்போது, ஒரு புதிய பக்கம் திறக்கும்.
- பக்கத்தில் கிடைக்கும் JE மற்றும் Executive Trainee இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- விண்ணப்பிக்கும் இணைப்பு புதிய பக்கத்தில் கிடைக்கும்.
- அந்த லிங்கை க்ளிக் செய்து நீங்களே பதிவு செய்து கொள்ளுங்கள்.
- விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
- சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்து பக்கத்தைப் பதிவிறக்கவும்.
- மேலும் தேவைக்காக அதன் கடின நகலை வைத்திருங்கள்.
ஆர்வமுள்ளவர்கள் சுருக்கமாக விண்ணப்பிக்க வழிகாட்டல்:
ஆர்வமுள்ளவர்கள் இந்த தகுதியான www.dvc.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று,
(Career→ Recruitment→ Recruitment Notices) எடுத்துக்கொள்ளவும். அதனுள் சென்று விண்ணப்பித்தால், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
டாபிக்ஸ்