HT Explainer: 'வந்தேறி பட்டு தான்.. ஆனாலும் அது சந்தேரி பட்டு' இத்தனை சிறப்புகளா?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Explainer: 'வந்தேறி பட்டு தான்.. ஆனாலும் அது சந்தேரி பட்டு' இத்தனை சிறப்புகளா?

HT Explainer: 'வந்தேறி பட்டு தான்.. ஆனாலும் அது சந்தேரி பட்டு' இத்தனை சிறப்புகளா?

Pandeeswari Gurusamy HT Tamil
May 05, 2023 09:08 AM IST

Chanderi Silk:சிறப்பு வாய்ந்த சந்தேரி புடவைக்கு புவிசார்குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

சந்தேரி பட்டு
சந்தேரி பட்டு

சந்தேரி கிராமம்

சந்தேரி என்பது மத்திய பிரதேசத்தில் கோட்டைகளுக்கும், கொத்தளங்களுக்கும் பஞ்சமேயில்லாத ஒரு கிராமம் தான். விந்திய மலைக்கூட்டங்களுக்கு இடையே மத்தியப்பிரதேசத்தின் மாள்வா மற்றும் பந்தேல்கண்டுக்கு நடுவே சந்தேரி அமைந்திருக்கும் நிலப்பரப்பில் இயற்கை எழில் கொஞ்சும் கிராமம். சந்தேரி கோட்டை, 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது பண்டேலா ராஜபுத்திரர்களால் கட்டப்பட்டது.

இதேபோல், கோஷாக் மஹால்- சுல்தான் கியாஸ்-உத்-தின் கில்ஜியின் அரண்மனை மற்றும் ஷெஹ்சாதி கா ரோசா -ஷாஜகானின் மகளின் கல்லறை போன்ற நினைவுச்சின்னங்கள் இந்த நகரத்தில் உள்ளன.

குவாலியரில் விமான நிலையம் அருகில் சந்தேரி கிராமம் உள்ளது. சுமார் 212 கிமீ தொலைவில் உள்ள இந்த விமான நிலையத்தில் இருந்து பேருந்து அல்லது வாடகை வண்டி மூலம் சந்தேரியை கிராமத்திற்கு செல்ல முடியும்.   சந்தேரிக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் 40 கிமீ தொலைவில் உள்ள லலித்பூர் ஆகும். அது மட்டும் அல்லாமல் ஜான்சி அல்லது குணா ரயில் நிலையங்களும் சந்தேரி கிராமத்திற்கு  அருகில்தான் இருக்கின்றன.

சந்தேரி பட்டு

அங்கே கி.பி. 2 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தான் இன்றைய பிரசித்தி பெற்ற சந்தேரி கைத்தறி நெசவு கண்டறியப்பட்டு மத்திய இந்தியாவில் வேரூன்றியது. 11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் மாள்வா, பந்தேல்கண்ட், குஜராத்தின் தென்பகுதி உள்ளிட்ட கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல நகரங்களின் முக்கிய வியாபாரப் கேந்திரமாக சந்தேரியும் வியாபார பண்டமாற்றாக சந்தேரி நெசவுப் பொருட்களும் சிறப்புற்று இருந்தன. சந்தேரி கையால் நெய்யப்பட்ட பட்டு மற்றும் பருத்தி துணிகளுக்கு பெயர் பெற்றது.சேலை நெசவு மட்டுமின்றி, எம்பிராய்டரி, ஜரி வேலைப்பாடு மற்றும் பிளாக் பிரிண்டிங் போன்ற பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்கும் சந்தேரி பெயர் பெற்றது. இந்த பொருட்கள் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது. தலைமுறை தலைமுறையாக இந்த நெசவு , தையல் சார்ந்தத் தொழிலை செய்து வருகின்றனர்.

புவி சார் குறியீடு

இத்தனை சிறப்பு வாய்ந்த சந்தேரி புடவைக்கு புவிசார்குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இது சந்தேரி புடவையின் தனித்துவமான அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க உதவுகிறது, மேலும் பாரம்பரிய கைவினைப்பொருளின் அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பிற்கான சட்ட கட்டமைப்பை வழங்குகிறது. இது அங்கு பாரம்பரிய முறையில் கைத்தறி நெசவு செய்து வரும் கைவினை கலைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதனால் இனிவரும் காலங்களில் பெண்களே… நீங்களும் ஒரிஜினல் சந்தேரி புடவையை அணிந்து மகிழ ரெடியாகுங்கள்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.