delhi air pollution: தில்லியில் அதிகரித்த காற்று மாசு; அரசு எடுத்த அதிரடி முடிவு
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Delhi Air Pollution: தில்லியில் அதிகரித்த காற்று மாசு; அரசு எடுத்த அதிரடி முடிவு

delhi air pollution: தில்லியில் அதிகரித்த காற்று மாசு; அரசு எடுத்த அதிரடி முடிவு

Karthikeyan S HT Tamil
Nov 04, 2022 08:47 PM IST

தில்லி அரசு எடுத்த அதிரடி முடிவு, இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

தில்லியில் காற்று மாசுபாடு (கோப்புப்படம்)
தில்லியில் காற்று மாசுபாடு (கோப்புப்படம்)

தில்லி திகார் சிறை டிஜிபி சந்தீப் போயலை அதிரடியாக மாற்றி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பால் காற்று மாசுவை குறைக்க 50 சதவீதம் அரசு ஊழியர்கள் காற்று மாசு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை வீட்டில் இருந்து பணியாற்றலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு பந்தர்பூரில் உள்ள புகழ்பெற்ற விட்டல் கோயிலில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அவரது மனைவி அம்ருதாவுடன் மகா பூஜை செய்தார்.

குஜராத் மோர்பி பாலம் விபத்துக்குள்ளான விவகாரத்தில் நகராட்சியின் தலைமை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பெற்றோர் மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் அங்கு (நாளை) சனிக்கிழமை முதல் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

மும்பை பகுதியில் புறநகர் விரைவு ரயில்கள் 15-20 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனை வளாகத்திற்குள் 132ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் கால சுரங்கப்பாதை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் நடக்கும் ஐநா பருவ நிலை மாநாட்டில் இந்திய குழுவுக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையேற்க உள்ளார்.

ஈரானில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தையொட்டி இதுவரை 277 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக சிக்கிமுக்கு இன்று வந்தடைந்தார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் நாளை (நவ.5) வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இஸ்ரேல் பொதுத் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சந்தேகம் கிளப்பியுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் கார் மீது பேருந்து மோதி ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனம் அதன் பாதி ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை இன்று தொடங்கியுள்ளது.

தெலங்கானாவில் மாநிலத்தில் மது குடித்தபோது, ஆம்லெட் தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு எதிராக ரஷியா தாக்கல் செய்த தீா்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.