Weather Update: நெருங்கி வரும் ‘ரெமல்’ புயல்..நெட்டிசன்கள் பகிர்ந்த சுவாரஸ்யமான வீடியோக்கள், புகைப்படங்கள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Weather Update: நெருங்கி வரும் ‘ரெமல்’ புயல்..நெட்டிசன்கள் பகிர்ந்த சுவாரஸ்யமான வீடியோக்கள், புகைப்படங்கள் இதோ..!

Weather Update: நெருங்கி வரும் ‘ரெமல்’ புயல்..நெட்டிசன்கள் பகிர்ந்த சுவாரஸ்யமான வீடியோக்கள், புகைப்படங்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
May 26, 2024 10:38 AM IST

Weather Update, Cyclone Remal: கடுமையான காற்று மற்றும் பலத்த மழையுடன், ரெமல் புயல் திரிபுரா, கடலோர பங்களாதேஷ், மேற்கு வங்கம் மற்றும் சில வடகிழக்கு மாகாணங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Cyclone Remal: Clouds hover over 'Muri Ganga' River.
Cyclone Remal: Clouds hover over 'Muri Ganga' River. (PTI)

இந்த புயல் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷின் அருகிலுள்ள கரையோரங்களில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே 110 முதல் 120 கி.மீ வேகத்தில் நகர்ந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

புயல் நெருங்கி வருவதால், ஏராளமானோர் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் பகிர்ந்து கொண்டது இதோ:

கடுமையான காற்று மற்றும் பலத்த மழையுடன், இந்த புயல் திரிபுரா, கடலோர பங்களாதேஷ், மேற்கு வங்கம் மற்றும் சில வடகிழக்கு மாகாணங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மிக அதிக மழை பெய்யும்

மே 26 மற்றும் 27 தேதிகளில், மேற்கு வங்கத்தின் கடலோரப் பகுதிகளில் மிக அதிக மழை பெய்யும் என்றும், வடக்கு ஒடிசாவில் கனமழை முதல் மிக அதிக மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  அசாம் மற்றும் மேகாலயாவும் மிக அதிக மழைப்பொழிவைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மே 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில், மற்ற வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் கனமழை முதல் மிக அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கனமழை முதல் மிக கனமழை பெய்யும்

இதற்கிடையில், மே 26 முதல் 28 வரை, வானிலை துறை திரிபுராவுக்கு "ஆரஞ்சு" எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை மற்றும் 70 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த நிலைமைகள், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய பேரிடர் மீட்புபடை (என்.டி.ஆர்.எஃப்) இன்ஸ்பெக்டர் ஜாகீர் அப்பாஸ் ஏ.என்.ஐ.யிடம் கூறுகையில், "இங்கு புயல் தாக்கினால், அனைத்து வகையான பேரழிவுகளையும் சமாளிக்க எங்கள் வீரர்கள் தயாராக உள்ளனர். எங்கள் அணி தீவிர மீட்புபணிகளை மேற்கொள்ள தயாராக உள்ளது.  மரம் விழும் அல்லது வெள்ள மீட்புக்கு எங்கள் குழு தயாராக உள்ளது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.

தமிழ்நாட்டிற்கு பாதிப்பு உண்டா?

இந்த புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு குறைவு என்றும், வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் அனேக இடங்களில் இன்று இயல்பையொட்டியும், நாளை (மே 27) முதல் 29-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு வெப்பம் இயல்பைவிட அதிகரித்தும் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அதனையொட்டிய தென் மாவட்ட கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் இன்றும், நாளையும் வீசக்கூடும் எனவும், வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 75 கி.மீ. முதல் 130 கி.மீ. வரையிலான வேகத்தில் இன்று வீசக்கூடும் எனவும், இதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.