Covid 19 Update: இந்தியாவில் கொரோனா தொற்றால் 21 பேர் பலி
இந்தியாவில் புதிதாக 2,380 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா தொற்று 3000 க்கும் கீழ் பதிவாகி உள்ளது.
இன்றைய நிலவரம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,380 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 2,961 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது. இது நேற்றைய தினத்தை ஒப்பிடும் போது குறைவாகும். இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 27,000 ஆக குறைந்துள்ளது.
இதன் மூலம் பலி எண்ணிக்கை 5,31,547 லிருந்து 5,31,680 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 47,246 லிருந்து 30,000 ஆக உயர்ந்து உள்ளது.
இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,44,10,738 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,547ல் இருந்து 5,31,680 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதித்து சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்தை 806 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் அதிகமாக தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.
இதுவரை தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 97 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 320 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 1,426 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்