Covid 19: மக்களே உஷாரா இருங்க.. மீண்டும் அதிரடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றால் 10 ஆயிரத்து 542 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வந்த வண்ணம் இருந்தன. தற்போது கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருந்தது.
அதன் படி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 542 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று 7 ஆயிரத்து 633 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 5,31, 152 லிருந்து, 5,31, 190 ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 61,233 லிருந்து 63, 562 ஆக உயர்ந்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,34,859 லிருந்து 4,48,45,401 ஆக உயர்ந்து உள்ளது.
இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதித்து சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்து உள்ளது. கேரளா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் அதிகமாக தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.
அதிகபட்சமாக ஏப்ரல் 14 ஆம் தேதி 11,109 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு அதிகமாக பதிவானது.
தமிழ் நாட்டில் நேற்று 5, 821 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 527 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் தினசரி பாதிப்பு 300 க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது அதை தாண்டி உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 36, 03, 290 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 401 பேர் கொரோனாக்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரியில் ஒருவர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ் நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 130 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்