CoronaVirus update: கொரோனா நிலவரம், ராகுல் நடைப்பயணம் - முக்கிய செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Coronavirus Update: கொரோனா நிலவரம், ராகுல் நடைப்பயணம் - முக்கிய செய்திகள்

CoronaVirus update: கொரோனா நிலவரம், ராகுல் நடைப்பயணம் - முக்கிய செய்திகள்

Karthikeyan S HT Tamil
Sep 11, 2022 06:33 PM IST

நாட்டில் கொரோனா நிலவரம், ராகலின் 5ஆவது நாள் நடைப்பயணம் உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

<p>முக்கிய செய்திகள் - செப்டம்பர் 11, 2022</p>
<p>முக்கிய செய்திகள் - செப்டம்பர் 11, 2022</p>

துபாயில் இருந்து கொச்சின் வந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

பாகிஸ்தானின் பலுச்சிஸ்தானில் உள்ள இந்து கோயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு தங்குவதற்கு இடமளித்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து வருகிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று சசி தரூர் உட்பட 5 எம்.பி.க்கள் கட்சியின் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

உத்தராகண்டில் மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று நேரில் சென்று நிவாரணப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

அமெரிக்காவின் சிகாகோவில் 1893ஆம் ஆண்டு விவேகானந்தர் ஆற்றிய உரையை பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளா மாநிலம் சென்னிதலா அருகே அச்சன்கோவில் ஆற்றில் 'பள்ளியோடம்' என்ற பாம்புப் படகு கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மாயமானார்.

பழம்பெரும் தெலுங்கு நடிகர் யு.வி. கிருஷ்ணம் ராஜுவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தேர்வு முடிவுகள் jeeadv.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும் என்று பக்தர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி கேரள மாநிலம் பாறசாலை பகுதியில் இருந்து இன்று 5வது நாள் நடைப்பயணத்தை தொடங்கினார்.

பப்புவா நியூ கினியாவின் மொராப் மாகாணத்தில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக ஹிர்தேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்னும் 10 நாட்களில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 5,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் சீன கேம் செயலி மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபருக்கு சொந்தமான இடங்களில் ரூ. 17.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

ஹைதராபாத்தில் விடுதி மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த புகாரில் அந்த விடுதி வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு விவசாய நிதியுதவியாக சுமாா் ரூ.300 கோடியை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.