Kopiko candy: கிரிக்கெட் 'தல' எம்.எஸ். தோனியுடன் இணையும் கோப்பிக்கோ காஃபி கேண்டி!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kopiko Candy: கிரிக்கெட் 'தல' எம்.எஸ். தோனியுடன் இணையும் கோப்பிக்கோ காஃபி கேண்டி!

Kopiko candy: கிரிக்கெட் 'தல' எம்.எஸ். தோனியுடன் இணையும் கோப்பிக்கோ காஃபி கேண்டி!

Manigandan K T HT Tamil
Jan 02, 2024 02:19 PM IST

நாசா விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு எடுத்துச்சென்ற முதலாவது கேண்டியும் கோப்பிக்கோதான்.

கோப்பிக்கோ தன்னுடைய பிராண்ட் அம்பாசிடராக கிரிக்கெட் நட்சத்திரம் கேப்டன் கூல் தல திரு.மகேந்திர சிங் தோனியை இணைத்துள்ளது.
கோப்பிக்கோ தன்னுடைய பிராண்ட் அம்பாசிடராக கிரிக்கெட் நட்சத்திரம் கேப்டன் கூல் தல திரு.மகேந்திர சிங் தோனியை இணைத்துள்ளது.

இவ்வாறு பிராண்ட் அம்பாசிடராக ஆவது பற்றி பேசிய எம்.எஸ்.தோனி,  ''கோப்பிக்கோ குடும்பத்துடன் இணைவது எனக்கு திரில்லாக இருக்கிறது, ஏனென்றால் கோப்பிக்கோ என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட், இதுதான் பெஸ்ட் காஃபி கேண்டி. இந்த உலகத்துடன் கோப்பிக்கோ பகிர்ந்து கொள்ள இருக்கும் இண்ட்ரஸ்டிங்கான செய்திகளில் கோப்பிக்கோ பிரதிநிதியாக வருவதை விரும்பி எதிர்பார்க்கிறேன்'' என்று சொன்னார்.

கோப்பிக்கோவுக்கும் எம் எஸ் தோனிக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் பற்றி விவரித்த மயோரா இந்தியாவின் மேனேஜிங் டைரக்டர் திரு. அச்யுத் காசிரெட்டி கோப்பிக்கோ இந்தோனேசியாவில் தோன்றி உலகின் நெ.1 காஃபி கேண்டியாக வளர்ந்து விட்டது, மேலும் நாசா விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு எடுத்துச்சென்ற முதலாவது கேண்டியும் கோப்பிக்கோதான். 

கோப்பிக்கோ அசலான காஃபி மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதால் இதில் அசலான காஃபி டேஸ்ட் வருகிறது. இதைப்போலத்தான் எம் எஸ் தோனி, ராஞ்சியில் பிறந்த அவர் இப்போது உலகமே வியந்து போற்றும் கிரிக்கெட் வீரராக வளந்திருக்கிறார், கிரிக்கெட் மைதானத்திலும் வெளியிலும் தோனியின் அசல் தன்மை போற்றிப் புகழப்படுகிறது. இவருக்கென இருக்கும் இருக்கும் கவர்ச்சியால் ரசிகள் தல என்று கூறி தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். கோப்பிக்கோவின் பிராண்ட் அம்பாசிடர் ஆவதற்கு இவர்தான் பெஸ்ட் ஜாய்ஸ். தோனியுடன் பார்ட்னர் ஆவது எங்களுக்கு பரவசம் அளிக்கிறது. எதிர்வரும் எங்கள் விளம்பரங்களில் தோனி தோன்றி எங்களுடைய கேண்டியை சாப்பிடும் மக்களின் அன்றாடத் தருணங்களில் ஆனந்தம் அளித்துக்கொண்டே இருப்பார் என்று கூறினார்.

பலதரப்பட்ட சேனல் மார்க்கெட்டிங் விளம்பரங்களில் கோப்பிக்கோவின் புதிய முகமாக எம் எஸ் தோனி தோன்றுவார். இந்தியாவில் கேண்டி தொழிலில் தனது முதலிடத்தை வலுப்படுத்த கோப்பிக்கோ மேற்கொள்ளும் பிராண்ட் நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுவார்.

மயோரா இந்தியா பற்றி :

வெகுவேகமாக வளர்ந்து வரும் எஃப்எம்சிஜி கம்பெனியான மயோரா இந்தியா இந்தோனேசியாவின் ஜகார்த்தாவை தலைமையிடமாக கொண்ட மயோரா குழுமத்தின் ஒரு பகுதியாகும். இந்தியாவில் இதன் தயாரிப்புகளில் கன்ஃபெக்ஷனரி பிரிவில் கோப்பிக்கோ, பிஸ்கட் பிரிவில் மால்க்கிஸ்ட் மற்றும் காஃபி ஜாய், சாக்லேட் பிரிவில் ச்சோக்கி ச்சோக்கி, கோ சாக்கோ மற்றும் பெங் பெங், பானங்கள் பிரிவில் கஃபே பிளண்ட் ஆகியன அடங்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.