Chhattisgarh assembly elections: எல்பிஜி மானியம், கடன் தள்ளுபடி.. சத்தீஸ்கர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
Congress: சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பூபேஷ் பாகேல் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
சத்தீஸ்கர் மாநில முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல், சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த பாகல், கட்சி ஆட்சிக்கு வந்தால், காஸ் சிலிண்டர்களுக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும் என்றும், மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் கூறினார்.
90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டசபைக்கு நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பர் 3ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்