Chhattisgarh: சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல்.. 10 போலீஸார் உள்பட 11 பேர் பலி
Maoist Attack: இந்தத் தாக்குதலில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த 10 போலீஸாரும் உயிரிழந்தனர். கார் ஓட்டுநரும் உயிரிழந்துவிட்டார்.
மாவோயிஸ்ட் நிகழ்த்திய தாக்குதலில் 10 போலீஸார் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலம், தன்டேவாடா என்ற பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது காவல் வாகனத்தை குறிவைத்து மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த 10 போலீஸாரும் உயிரிழந்தனர். கார் ஓட்டுநரும் உயிரிழந்துவிட்டார். ஆக மொத்தம் 11 பேர் மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்தனர்.
முன்னதாக, சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவத்தினர் சென்ற வாகனத்தில் மீது பயங்ரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
முதலில் தீ விபத்து என கருதிய நிலையில், பின்னர் தான் அது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் என தெரியவந்தது.
இந்நிலையில், அந்த ராணுவ வாகனத்தின் கீழே வெடிகுண்டு பொருத்தப்பட்ட படங்களை வெளியிட்டது பிஏஎஃப்எஃப் அமைப்பு.
பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான பிஏஎஃப்எஃப் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றதோடு, எப்படி தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பான வீடியோவையும் விரைவில் வெளியிடுவோம் என தெரிவித்து இருந்தது.
பாடா துரியன் என்ற பகுதிக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து இந்த தாக்குதலானது நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கண் இமைக்கும் நேரத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த நிலையில், 7 பேர் கொண்ட தீவிரவாத கும்பல் இதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ராணுவத்தினர், போலீஸ், உளவுத்துறை அமைப்பினர் ஒருங்கிணைந்து இந்த தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழையை சாதகமாக வைத்து, ராக்கெட் உந்து குண்டுகளை பயன்படுத்தி தீவிரவாதிகள் இதில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
வீரமரணம் அடைந்த 5 ராணுவ வீரர்களும் ராஷ்ட்ரீய ரைஃபிள் பிரிவைச் சேர்ந்தவர் ஆவர்.
வீரமரணம் அடைந்த 5 இந்திய வீரர்களில், மன்தீப் சிங் (சங்கோயன் ககான் கிராமம்), ஹர்கிரிஷன் சிங் (தல்வண்டி பார்த் கிராமம்), குல்வந்த் சிங் (சாரிக்), மற்றும் சேவக் சிங் (பாகா) ஆகியோர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் ஆவர். தேபாஷிஷ் பஸ்வால் ஒடிசாவில் உள்ள அல்கம் சாமில் கந்தாயத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்